சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்திலிருந்து விழுந்த பாம்புகள்: தாலுகா ஆபீசில் மக்கள் அதிர்ச்சி

Added : அக் 13, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்து பாம்புகள் விழுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, உதவித்தொகை, பட்டா மாறுதல், சான்றுகள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை நாடுகின்றனர். பல்லடம், பொள்ளாச்சி ரோட்டில், தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது.நேற்று மதியம், பல்வேறு பணிகளுக்காக

பல்லடம்:பல்லடம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்து பாம்புகள் விழுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, உதவித்தொகை, பட்டா மாறுதல், சான்றுகள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை நாடுகின்றனர். பல்லடம், பொள்ளாச்சி ரோட்டில், தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது.நேற்று மதியம், பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் பலர், தாலுகா அலுவலக வளாகத்தில் பார்த்திருந்தனர். திடீரென, அங்கிருந்த மரத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட பச்சை பாம்பு குட்டிகள் கீழே விழுந்தன.இதனை பார்த்து, அலறியடித்து ஓடிய பொதுமக்கள், பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பக்கெட் மூலம் பாம்புகளை அள்ளிச் சென்ற தீயணைப்பு படை வீரர்கள், ஒரே ஒரு பாம்பை மட்டும் பிடித்ததாகக் கூறினர்.பல்லடம் தாலுகா அலுவலக வளாகம் புதர்மண்டி கிடக்கிறது. அதில், விஷ ஜந்துக்கள் ஏராளமாக இருக்க வாய்ப்பு உள்ளது. தினமும், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் தாலூகா அலுவலகம் வருவதால், வளாகத்தை சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X