கேரளா டூ மதுரைக்கு கடத்தப்பட்ட வன உயிரினங்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளா டூ மதுரைக்கு கடத்தப்பட்ட வன உயிரினங்கள் பறிமுதல்

Added : அக் 13, 2021
Share
மதுரை:கேரளாவில் இருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட கழுகு, ஆந்தை, நான்கு காட்டுப் பூனைகளை மதுரை வனத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.மதுரைக்கு வன உயிரினங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறை அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட போது மதுரை கீழப்பனங்காடி பகுதி வழி வந்த சரக்கு வாகனத்தில் இரும்பு
 கேரளா டூ மதுரைக்கு கடத்தப்பட்ட வன உயிரினங்கள் பறிமுதல்

மதுரை:கேரளாவில் இருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட கழுகு, ஆந்தை, நான்கு காட்டுப் பூனைகளை மதுரை வனத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மதுரைக்கு வன உயிரினங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறை அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட போது மதுரை கீழப்பனங்காடி பகுதி வழி வந்த சரக்கு வாகனத்தில் இரும்பு கூண்டுக்குள் ஒரு கழுகு, ஆந்தை மற்றும் நான்கு காட்டுப் பூனைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

வாகன ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த வன அலுவலர்கள் வாகனம், வனஉயிரினங்களை பறிமுதல் செய்தனர். முதல் கட்ட விசாரணையில் திருவனந்தபுரத்தில் இருந்து கோசாகுளம் பகுதி செல்லப் பிராணிகள் விற்பனை மையத்திற்காக வன உயிரினங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

வன உயிரினங்களை கடத்திய மற்றும் மதுரையில் வைத்து விற்கும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிந்த பிறகு தான் ஏன் எதற்கு கடத்தப்பட்டது என தெரியவரும் என வன அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X