பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தனித்தேர்வருக்கு மதிப்பெண் சான்று உதவி இயக்குனர் தகவல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
சிவகங்கை : பிளஸ் 2 தனித்தேர்வர்கள் ஒரிஜினல் மதிப்பெண் சான்றினை நேரடியாகவே, தபால் மூலமோ பெறலாம் என அரசு தேர்வுத்துறை சிவகங்கை உதவி இயக்குனர் தனலட்சுமி தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் 2014 முதல் 2018 வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் பிளஸ் 2 தனித்தேர்வர்கள் அரசு பொது தேர்வினை எழுதினர். இதற்காக பத்தாம் வகுப்பு மார்க் ஷீட், டி.சி.,


சிவகங்கை : பிளஸ் 2 தனித்தேர்வர்கள் ஒரிஜினல் மதிப்பெண் சான்றினை நேரடியாகவே, தபால் மூலமோ பெறலாம் என அரசு தேர்வுத்துறை சிவகங்கை உதவி இயக்குனர் தனலட்சுமி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் 2014 முதல் 2018 வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஜூன், செப்டம்பர் ஆகிய மாதங்களில் பிளஸ் 2 தனித்தேர்வர்கள் அரசு பொது தேர்வினை எழுதினர். இதற்காக பத்தாம் வகுப்பு மார்க் ஷீட், டி.சி., ஒரிஜினல் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.

தேர்வு முடிந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றினை அந்தந்த தேர்வு மையங்களில் பெறவில்லை. எனவே அக்கால கட்டத்தில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றினை நேரடியாக சிவகங்கை அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம்.இல்லாவிடில் ரூ.45 தபால் தலையுடன் கூடிய கவரில் முழு முகவரி குறிப்பிட்டு விண்ணப்பத்துடன் அனுப்பவும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X