சில வரி செய்தி: தூய்மை இந்தியா விழிப்புணர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்தி: தூய்மை இந்தியா விழிப்புணர்வு

Added : அக் 13, 2021
Share
துாய்மை இந்தியா விழிப்புணர்வு மத்திய அரசின் கள விளம்பரத் துறை சார்பில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவு விழா நடந்தது. விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர போலீசார், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, கோவை 'நேரு யுவ கேந்திரா சங்கதன்' ஆகியன இணைந்து வழங்கின. இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா ஆர்.எஸ்., புரம், மாநகராட்சி கலையரங்கில்

துாய்மை இந்தியா விழிப்புணர்வு மத்திய அரசின் கள விளம்பரத் துறை சார்பில் துாய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவு விழா நடந்தது. விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர போலீசார், மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, கோவை 'நேரு யுவ கேந்திரா சங்கதன்' ஆகியன இணைந்து வழங்கின.
இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா ஆர்.எஸ்., புரம், மாநகராட்சி கலையரங்கில் நடந்தது.இதில், சிறந்த 'வாட்டர் வாரியர்' விருது பெற்ற கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மணிகண்டன், நம்ம நவக்கரை செயலாளர் சரவணக்குமார், ஆர்க் பவுண்டேஷன் நிறுவனர் அபர்ணா, வெஸ்ட்ரிக் அறக்கட்டளை நிறுவனர் ஜெகன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா அனைவரையும் பாராட்டி கவுரவித்தார். கோவை கள விளம்பரத் துறை துணை இயக்குனர் கரீனா உட்பட பலர் பங்கேற்றனர்.
வ.உ.சி., பிறந்த நாள் பேச்சு போட்டி
வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளையொட்டி, கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி பா.ஜ., சார்பில் நடந்தது.ராம் நகர் அசோகா பிரேமா திருமண மண்டபத்தில், ஐந்து தலைப்புகளின் கீழ் பேச்சு போட்டி நடந்தது. முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா 1,500 ரூபாய் வெகுமதியும் சான்றிதழும் வழங்கப்பட்டது பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வரனின் மகள் மரகதமீனாட்சி ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக சைவ பெருமக்கள் பேரவை தலைவர் சண்முகம் பங்கேற்றார்.
கல்லுாரிகளில் விளையாட்டு வசதி எப்படி?
பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளில் விளையாட்டு துறைகளில் மாணவர்களை ஊக்குவிக்க அனைத்து வசதிகளும் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா, என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கவுன்சில் ஆய்வைதுவக்கியுள்ளது. மேலும் கல்லுாரிகளில் விளையாட்டு மைதானம், உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், யோகா மையம், பிட்னஸ் மையம், போன்ற வசதிகள் எந்த அளவில் உள்ளது என்ற விரிவான விளக்கத்துடன் கோப்புகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இ.எஸ்.ஐ.,க்கு ஜெனரேட்டர்
ரவுண்ட் டேபிள் அமைப்பு சார்பில், கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனைக்கு, ரூ.40 லட்சம் மதிப்பில், 500 கிலோ வாட் டீசல் ஜெனரேட்டர் வழங்கப்பட்டது. அதற்கான ஒப்பந்த கடிதத்தை ரவுண்ட் டேபிள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவமனை டீன் ரவீந்திரனிடம் வழங்கினர். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நம்ம ஊர் சந்தை 'டல்'
கோவை கிராஸ்கட் ரோடு பவர்ஹவுஸ் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மாதம் தோறும் நம்ம ஊர் சந்தை நடத்தப்படுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தை நடத்த, மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. அதனால் டாடாபாத் ஏழாவது வீதியில் உள்ள தனியார் அரங்கில் சந்தை நடந்தது. புதிய இடம் என்பதால் பொருட்கள் வாங்க மிக குறைவானவர்களே வந்திருந்தனர். வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பாட்டிலால் தாக்கியவருக்கு பொதுமாத்து
சுந்தராபுரம், சங்கம் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 47. அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். போதையில் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் சிகரெட் வாங்கினார். பணம் தராததால், செந்தில்குமார் சத்தம் போட்டார். இருப்பினும் அவ்வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.10 நிமிடங்களுக்கு பின், மீண்டும் கடைக்கு வந்த அவ்வாலிபர் செந்தில்குமாரை, கண்ணாடி பாட்டிலால் தாக்கினார். இதில் தாடை, இரு தோள்பட்டைகளில் கண்ணாடி கிழித்து காயமேற்பட்டது. அங்கிருந்தோர் அவ்வாலிபரை பிடித்து 'மாத்து' கொடுத்து, போத்தனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வெள்ளலூர் செல்லும் வழியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவரின், 18 வயது மகன் என தெரிந்தது. தொடர்ந்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாணவிகளுக்கு மருத்துவ முகாம்
உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் பி.டி.ஏ., சார்பில், 'ஆரோக்கியம் மற்றும் வலி நிவாரணம்' என்ற மாணவிகளுக்கான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்தும் மருத்துவர்கள் விளக்கமளித்தனர். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X