கோயிலுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் உயர்நீதிமன்றம் கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோயிலுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் உயர்நீதிமன்றம் கேள்வி

Added : அக் 13, 2021
Share
மதுரை:கடைகள், சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதித்துள்ளபோது கோயில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருநெல்வேலி கோயில் திருவிழாவிற்கு அனுமதி கோரிய மனுவை அரசு பரிசீலிக்க உத்தரவிட்டது.திருநெல்வேலி லட்சுமணன் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். அம்பாள் கோயிலில்

மதுரை:கடைகள், சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதித்துள்ளபோது கோயில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருநெல்வேலி கோயில் திருவிழாவிற்கு அனுமதி கோரிய மனுவை அரசு பரிசீலிக்க உத்தரவிட்டது.

திருநெல்வேலி லட்சுமணன் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். அம்பாள் கோயிலில் சம்பரம் வீதி உலா துவங்கி நெல்லையப்பர் கோயில் நான்கு ரத வீதி வழியாக சென்று மீண்டும் அதே கோயிலுக்கு வந்து சேரும். 2020 ல் உயர்நீதிமன்ற அனுமதியுடன் சாலியர் தெருவில் சப்பர ஊர்வலம் நடந்தது.

தற்போது தசரா திருவிழா துவங்கியுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி அக்.,15 ல் சப்பர ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அனுமதி கோரி திருநெல்வேலி கலெக்டர், தாசில்தாருக்கு மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு லட்சுமணன் மனு செய்தார்.

நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி: கடைகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதிக்க பட்டு உள்ளது. கோயில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் என கேள்வி எழுப்பினார். அரசுத் தரப்பில் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X