ஆசிரியர் பயிற்றுநர் இடமாறுதல் கலந்தாய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பயிற்றுநர் இடமாறுதல் கலந்தாய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 13, 2021
Share
மதுரை:சட்டப்பூர்வ தடை ஏதுவும் இல்லையெனில் ஆசிரியர் பயிற்றுநர் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம். மனுதாரர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஆசிரியர் பயிற்றுநர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்காக பணி மூப்பு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.இதற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: அரசாணைப்படி பட்டியலை பணி

மதுரை:சட்டப்பூர்வ தடை ஏதுவும் இல்லையெனில் ஆசிரியர் பயிற்றுநர் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம். மனுதாரர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஆசிரியர் பயிற்றுநர் பொது இடமாறுதல் கலந்தாய்விற்காக பணி மூப்பு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.இதற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

அரசாணைப்படி பட்டியலை பணி நியமனம் செய்த தேதி அடிப்படையில் தயாரிக்க வேண்டும். அதை பின்பற்றவில்லை. காலிப்பணியிடம் இல்லாமல் (ஜீரோ வேக்கன்சி) பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பல ஆண்டுகளாக பணிபுரிகிறோம்.

ஆனால் 2014 ல் பணி நிரவலில் நியமிக்கப்பட்ட 362 பேருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எங்களுக்கு பணியில் இளையவர்கள். இது சட்டவிரோதம். பட்டியலை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: மாநிலம் முழுவதும் 3700 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்கள் உள்ளன. இதில் 400 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப் பட்டனர். 3300 பணியிடங்கள் காலியாக உள்ளன. 362 பேருக்கு முன்னுரிமை அளித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடும் முன் மனுதாரர்கள் ஆட்சேபம் தெரிவிக்க வாய்ப்பளிக்கவில்லை என தெரிவித்தது.

அரசுத் தரப்பு: மனுதாரர் கூறுவது ஏற்புடையதல்ல. ஆசிரியர் பயிற்றுநர் திட்டம் வந்தபோது முதலில் 10 முதல் 12 பள்ளிகள் அல்லது 40 ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டனர். தற்போது அவ்விதிகள் மாற்றியமைக்கப்பட்டு ஒரு வட்டாரத்தில் 18 பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3700 பயிற்றுநர்களில் 500 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். மீதம் 2958 பயிற்றுநர்கள் 45 ஆயிரத்து 898 பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.

செங்கல்பட்டு, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் போதிய பயிற்றுநர்கள் இல்லை. புதிய விதிகள்படி பயிற்றுநர்களை மாவட்டங்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளது. பணி மூப்பு பட்டியலை திருத்தியமைக்க அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்தது.

நீதிபதி: மாணவர்கள், கல்வி நிறுவனங்களின் நலன் கருதி பொது இடமாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்க முடியாது. அதேசமயத்தில் மனுதாரர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். மனுதாரர்கள் நடப்பு கல்வியாண்டு பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். இந்த இடைக்கால உத்தரவு இந்நீதிமன்றத்தில் மனு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சட்டப்பூர்வமாக தடை ஏதுவும் இல்லையெனில் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம். விசாரணை 3 வாரங்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X