உரம் பதுக்கலை தடுக்க குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உரம் பதுக்கலை தடுக்க குழு

Added : அக் 13, 2021
Share
சென்னை:உரம் பதுக்கலை கண்காணிக்க வேளாண் துறையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் சம்பா பருவ நெல் சாகுபடி காலம் துவங்கியுள்ளது. தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப் பட உள்ளது. மாநிலம் முழுதும் 35 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி நடக்கும்.இதனால் யூரியா டி.ஏ.பி. பொட்டாஷ் கூட்டு உரங்கள் தேவை

சென்னை:உரம் பதுக்கலை கண்காணிக்க வேளாண் துறையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சம்பா பருவ நெல் சாகுபடி காலம் துவங்கியுள்ளது. தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப் பட உள்ளது. மாநிலம் முழுதும் 35 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி நடக்கும்.இதனால் யூரியா டி.ஏ.பி. பொட்டாஷ் கூட்டு உரங்கள் தேவை அதிகரித்துள்ளது.

உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர்.இதையடுத்து அரசு உத்தரவின்படி வேளாண்மை கூட்டுறவு துறைகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளன.தற்போது தனியாரிடம் 50 ஆயிரத்து 468 டன்; கூட்டுறவு துறையில் 17 ஆயிரத்து 695 டன் யூரியா கையிருப்பில் உள்ளது.

இதேபோல் தனியாரிடம் 20 ஆயிரத்து 388 டன் கூட்டுறவு துறையில் 12 ஆயிரத்து 655 டன் டி.ஏ.பி. கையிருப்பில் உள்ளது. பொட்டாசியத்தை பொறுத்தவரை தனியாரிடம் 26 ஆயிரத்து 934 டன்களும் கூட்டுறவில் 12 ஆயிரத்து 238 டன்களும் கையிருப்பில் உள்ளன.அதிகபட்சமாக தனியாரிடம் 99 ஆயிரத்து 366 டன்களும் கூட்டுறவில் 15 ஆயிரத்து 967 டன்களும் கூட்டு உரங்கள் கையிருப்பில் உள்ளன.இதை வைத்து இம்மாத தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X