சோத்துப்பாறை, மஞ்சளாறு நீர்தேக்கங்கள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோத்துப்பாறை, மஞ்சளாறு நீர்தேக்கங்கள் திறப்பு

Added : அக் 13, 2021
Share
சென்னை:தேனி மாவட்டம், சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட, அரசு உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, சோத்துப்பாறை நீர்தேக்கத்தில் இருந்து, முதல் போக 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து நாளை மறுதினம் முதல் தண்ணீர்

சென்னை:தேனி மாவட்டம், சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட, அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, சோத்துப்பாறை நீர்தேக்கத்தில் இருந்து, முதல் போக 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து நாளை மறுதினம் முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்வழியே, தேனி மாவட்டத்தில், 2,865 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசனம் பெறும் வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு நீர்தேக்கத்தில் இருந்து, நாளை மறுதினம் முதல், 152 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட, அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால், தேனி மாவட்டத்தில், 3,148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில், 2,111 ஏக்கர் என, மொத்தம், 5,259 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X