எடியூரப்பா ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை

Added : அக் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு:பா.ஜ.,வை சேர்ந்தவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சமீபத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத 487 கோடி ரூபாய் சிக்கியது.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மூத்த மகனும், எம்.பி.,யுமான ராகவேந்திரா ஆகியோரின் அந்தரங்க

பெங்களூரு:பா.ஜ.,வை சேர்ந்தவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா ஆதரவாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சமீபத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத 487 கோடி ரூபாய் சிக்கியது

.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மூத்த மகனும், எம்.பி.,யுமான ராகவேந்திரா ஆகியோரின் அந்தரங்க உதவியாளராக இருந்த உமேஷ்.அவரது மற்றொரு மகன் விஜயேந்திராவின் நெருங்கிய நண்பர் அரவிந்த். இவர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை: சோதனை நடத்தப்பட்ட இடங்களில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 382 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என ஒரு நிறுவனமும், 105 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை என மற்றொரு நிறுவனமும் ஒப்புகொண்டுள்ளன.

இது தவிர, சோதனை நடந்த பிற இடங்களில், கணக்கில் காட்டப்படாத, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள, முதலில் இடம் பெற்றுள்ள இரண்டு நிறுவனங்களும் எடியூரப்பா ஆதரவாளர்களுக்கு சொந்தமானவை என தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
13-அக்-202110:07:33 IST Report Abuse
R VENKATARAMANAN அரசியல் வாதி எவனும் யோக்கியனில்லை. எல்லோரும் திருடர்களே. இது என் கருத்து. மத்திய சர்காரும் ஏதோ ரெய்டு என்று பயமுறுத்துவதும் மக்களை திசை திரும்புவதும் தான் வேலையாக செய்கிறது. இதுவரை சோதனை செய்தவைகளில் எவர்மேலும் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கியதாக தெரியவில்லை. உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கவில்லை என்றாள் ஒரு ப்ரயோஜனனமும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X