பொது செய்தி

தமிழ்நாடு

பன்முக திறமையால் உச்சம் தொட்ட மக்கள் நாயகன் நடிகர் ஸ்ரீகாந்த்

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இயல்பான நடிப்பால் சாமான்ய மக்களின் நாயகனாக உயர்ந்தார். வில்லன், சின்னத்திரை நடிகர் என பன்முக திறமையால் உச்சம் தொட்டார்.சினிமாவிற்கு வருவதற்கு முன் சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் பணிபுரிந்தார். அப்போதிருந்தே மேடை நாடகங்களிலும் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். 1964ல் இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து
மக்கள் நாயகன், ஸ்ரீகாந்த்

முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இயல்பான நடிப்பால் சாமான்ய மக்களின் நாயகனாக உயர்ந்தார். வில்லன், சின்னத்திரை நடிகர் என பன்முக திறமையால் உச்சம் தொட்டார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன் சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் பணிபுரிந்தார். அப்போதிருந்தே மேடை நாடகங்களிலும் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் ஸ்ரீகாந்த். 1964ல் இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய "வெண் ணிற ஆடை" படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஏற்று நடித்த டாக்டர் சந்துரு கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.
இப்படம் இவருக்கு மட்டுமின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் முதல் படம் அமைந்தது.


latest tamil newsமேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் பிரபலமானார். இதையடுத்து தனது சொந்தப் பெயரான வெங்கட்ராமனை பயன்படுத்தாமல் ஸ்ரீகாந்த் பெயரிலேயே சினிமாவிலும் நடித்தார். 'வெண்ணிற ஆடை' படத்திற்கு பிறகு இவருக்கு பெரும்பாலும் குணச்சித்திர, நகைச்சுவை கிடைத்தன.

தன்னால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று நிரூபித்தவர் ஸ்ரீகாந்த். 'எதிர் நீச்சல்' 'பூவா தலையா', 'பாமா விஜயம்' 'நவகிரகம், 'காசேதான் கடவுளடா போன்ற படங்கள் இவருடைய நகைச் சுவை நடிப்பிற்கு சான்று.

1972ல் இயக்குநர் திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'அவள்' படத்தின் மூலம் இவர் வில்லனாகவும் அறிமுகமானார்.

சிவாஜியோடு நடித்த தங்கப்பதக்கம் படம் இவரது திரைப் பயணத்தில் ஒரு மைல்கல். இப்படத்தில் இவரது 'ஜெகன்' கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்களான 'சில நேரங்களில் சில மனிதர்கள்' 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' "கருணை உள்ளம்" போன்ற படங்களில் நடிகர் ஸ்ரீகாந்த முக்கிய வேடத்தில் நடித்தார்.

சிவாஜி, ஜெமினி, ஜெய் சங்கர், முத்துராமன், சிவகுமார், கமல், ரஜினி நடிகர்களுடனும் நடித்தார். எம்.ஜி.ஆருடன் நடிக்கவில்லை .இயக்குநர் ஸ்ரீதர் தொடங்கி பாலசந்தர்,பீம்சிங், திருலோகசந்தர், முக்தா ஸ்ரீனிவாசன், மாதவன், கிருஷ்ணன் பஞ்சு, திருமுகம் உட்பட முக்கிய இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளார்.


latest tamil news


200 படங்கள் வரை நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், நடிகர் என்ற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதிக்கு சொந்தக்காரர். கடைசியாக 2009ல் 'குடியரசு' படத்தில் நடித்தார்.

ஸ்ரீகாந்துக்கு தெய்வ பக்தி அதிகம். நம்பியாருடன் சேர்ந்து 40 முறைக்கு மேலாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்


இறுதிச்சடங்குlatest tamil news
ஸ்ரீகாந்த்82,சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது மூப்பு, உடல்நல பாதிப் பால் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார். கொரோனா தொற்று காரணமாக மாலையே இறுதிச்சடங்கு முடிக்கப்பட்டது.


ஜெ., பட ஹீரோ


மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடித்த முதல் படமான வெண்ணிற ஆடை படத்தில் ஹீரோவாக நடித்தவர். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 50 படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.


வாலியுடன் நட்புதிருவல்லிக்கேணியில் வசித்து வந்த ஸ்ரீகாந்தின் அறையில் இருந்த படி பாலசந்தர் எழுதிய நாடகங்கள் ஏராளம். அதேபோல் கவிஞர் வாலி, நடிகர் நாகேஷ் உடன் நல்ல நட்பில் இருந்தார். இவரை வெங்கி' என்றும் "வெங்கு' என்றும் தான் அழைப்பார்கள்.


latest tamil newsமாணவி டூ ஹீரோயின்ஸ்ரீகாந்திற்கு ஒரே மகள். மகளை பள்ளிக்கு அழைத்து வந்துவிடும் போது, 'ஸ்ரீகாந்த் ஸ்ரீகாந்த்' என பள்ளியில் இருந்து குரல் கேட்கும். பின்னாளில் அந்த மாணவிகளில் ஒருவர் இவரது படத்தின் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு பெற்றார். அவர் தான் ஸ்ரீப்ரியா.


தேசிய விருது


ராஜாஜி எழுதிய புதினத்தைத் தழுவி ஸ்ரீகாந்த் நடித்து சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1974ல் வெளியான படம் 'திக்கற்ற பார்வதி'. இப்படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.


இவரது பாடல்களில் சில...* அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா... (எதிர்நீச்சல்)

* வரவு எட்டணா செலவு பத்தணா (பாமா விஜயம்)

* ஜம்புலிங்கமே ஜடாதரா (காசே தான் கடவுளடா)

* என்ன என்ன வார்த்தைகளோ (வெண்ணிற ஆடை)

* சித்திரமே சொல்லடி... முத்தமிட்டால்.. (வெண்ணிற ஆடை)

* கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல.. (வெண்ணிற ஆடை)

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
13-அக்-202118:07:19 IST Report Abuse
THINAKAREN KARAMANI நல்ல நடிகரான ஸ்ரீகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
13-அக்-202114:01:20 IST Report Abuse
pradeesh parthasarathy பிஜேபி ஊடகத்தினால் மறைக்காட்ட செய்தி ... இவர் ஒரு தீவிர காங்கிரெஸ்க்காரர் ...
Rate this:
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
13-அக்-202112:06:39 IST Report Abuse
KUMAR. S படத்தில்தான் வில்லன். நிஜ வாழ்க்கையில் ஹீரோ ..ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X