பொது செய்தி

தமிழ்நாடு

'அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும்'

Added : அக் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரியாக நடத்தினால் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்'' என்று ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்தார்.இந்திய தர நிர்ணய ஆணையத்தின் தென் மண்டலம் சார்பில் சென்னையில் நடந்த உலக தர நிர்ணய தின நிகழ்வில் அவர் பேசியதாவது:சேவைக்கான தரம் அரசுக்கும் தனியாருக்கும் இடையே மாறுபட்டுள்ளது.அரசுப் பள்ளி
 'அனைத்து மாநிலங்களையும்  ஒரே மாதிரி நடத்த வேண்டும்'

சென்னை:''மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரியாக நடத்தினால் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்'' என்று ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்தார்.

இந்திய தர நிர்ணய ஆணையத்தின் தென் மண்டலம் சார்பில் சென்னையில் நடந்த உலக தர நிர்ணய தின நிகழ்வில் அவர் பேசியதாவது:சேவைக்கான தரம் அரசுக்கும் தனியாருக்கும் இடையே மாறுபட்டுள்ளது.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர்; அவர்களின் மாணவர்கள் தங்கள் பெயரை முழுதாக எழுதத் தெரியாமல் தரமின்றி உள்ளனர்.

குறைவான சம்பளம் பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்கள் தரமாக உள்ளனர்.மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அப்போது தான் மாநிலங்களில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது: மருத்துவ துறைக்கு தர நிர்ணயம் மிகவும் அவசியம். நிலையான வளர்ச்சி தர நிர்ணயம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளன. தற்போது பெருநகரங்களின் வளர்ச்சி நிலையாக இல்லை. இதன் காரணமாக கொரோனா தொற்று கிராமங்களை விட நகரங்களில் அதிகம் பரவி நாட்டின் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கியது.

கொரோனா பாதிப்பில் நாம் பெற்ற பாடங்களை நிலையான வளர்ச்சி திட்டங்களில் செயல் படுத்த வேண்டும். அப்போது தான் பேரிடர்களிலிருந்து அனைத்து உயிர்களையும் காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் இந்திய தர நிர்ணய ஆணையத்தின் தென் மண்டல துணை இயக்குனர் யாதவ் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை துணைத் தலைவர் ஹேமந்த் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SKANDH - Chennai,இந்தியா
13-அக்-202108:03:27 IST Report Abuse
SKANDH இந்த கிருபாகரன் அதிமுக ஆட்சியின் பொது கண்டா படி வார்த்தைகளை உதிர்த்துள்ளான். financial emergency பண்ணவான்? இப்போ தான் அதை செய்யணும் சொல்லாண்ட. இவன் கருணாநிதியின் உறவினரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X