சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளைஞரை கட்டையால் தாக்கிய இருவர் கைது

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:சிங்காநல்லுார், காமராஜர் ரோடு, ராமானுஜம் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 26. வீடுகளில் உள் அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு சினிமா தியேட்டர் முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள், கார்த்திகேயனிடம் மது அருந்த பணம் கேட்டனர். மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இருவரும், கட்டையால் வாலிபரை

கோவை:சிங்காநல்லுார், காமராஜர் ரோடு, ராமானுஜம் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 26. வீடுகளில் உள் அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு சினிமா தியேட்டர் முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள், கார்த்திகேயனிடம் மது அருந்த பணம் கேட்டனர். மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இருவரும், கட்டையால் வாலிபரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.படுகாயமடைந்த வாலிபரை அருகே இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.வாலிபரை தாக்கியது வரதராஜபுரத்தை சேர்ந்த சுப்ரமணியம், 27, ஏ.கே.ஜி., நகரை சேர்ந்த கதிரேசன், 49 என்பது தெரிந்து கைது செய்யப்பட்டனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின், சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X