பொது செய்தி

தமிழ்நாடு

மதிப்பெண் சான்றிதழ் பெற தனித்தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறாதோருக்கு, இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாக, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வுகள் மண்டல உதவி இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:மாவட்ட எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களில், 2014 முதல் 2018 வரை தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் சிலர், தற்போது வரை மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர்.

கோவை:தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறாதோருக்கு, இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாக, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வுகள் மண்டல உதவி இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:மாவட்ட எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களில், 2014 முதல் 2018 வரை தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் சிலர், தற்போது வரை மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். தேர்வெழுதிய இரு ஆண்டுகளுக்கு பிறகு, பெறப்படாத தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழை அழிக்க, விதிமுறைகளில் இடமுள்ளது.எனவே, இறுதி வாய்ப்பாக, இன்னும் 90 நாட்களுக்குள், தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை, வேலைநாட்களில் அணுகலாம். அஞ்சல் முறையில் விண்ணப்பிக்க, 45 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி, சுய முகவரியோடு கோரிக்கை கடிதம் மற்றும் ஹால்டிக்கெட் அச்சுபகர்ப்பு நகலை இணைத்து அனுப்பலாம்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X