அப்துல் காதிர் கான் குறித்து பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஜெருசலேம்:சமீபத்தில் காலமான பாகிஸ்தானின் அணு ஆயுத தந்தை என அழைக்கப்படும் அப்துல் காதிர் கான் குறித்து, இஸ்ரேல் பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் அணு ஆயுத தந்தை என அழைக்கப்படும் அப்துல் காதிர் கான், சமீபத்தில் இறந்தார்.இவரைப் பற்றி இஸ்ரேலில் வெளியாகும் 'ஹாரிட்ஜ்' நாளிதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில்

ஜெருசலேம்:சமீபத்தில் காலமான பாகிஸ்தானின் அணு ஆயுத தந்தை என அழைக்கப்படும் அப்துல் காதிர் கான் குறித்து, இஸ்ரேல் பத்திரிகை பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் அணு ஆயுத தந்தை என அழைக்கப்படும் அப்துல் காதிர் கான், சமீபத்தில் இறந்தார்.இவரைப் பற்றி இஸ்ரேலில் வெளியாகும் 'ஹாரிட்ஜ்' நாளிதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானுக்கு அணு குண்டை தயாரித்த கான், சர்வதேச அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தால் லாபமடைந்தவர். அணு தகவல்களை ஈரானுக்கு விற்றவர். ஈரான் இப்போது அணு ஆயுத நாடாக இருப்பதற்கு கான் தான் காரணம். இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' அப்துல்காதிர் கானை தொடர்ந்து கண்காணித்து வந்தது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்துல்காதிர் கான் அதிகம் பயணம் செய்தார். அவருடைய உள்நோக்கத்தை மொசாட் சரியாக புரிந்து கொள்ளவில்லை.சரியாக புரிந்திருந்தால் அப்துல்காதிர் கானை கொலை செய்ய மொசாட்டின் தலைவராக இருந்த ஷப்தய் ஷாவிட், ஒரு குழுவை நிச்சயம் அனுப்பியிருப்பார். அப்துல்காதிர் கானும் கொல்லப்பட்டிருபார். ஈரானும் அணு ஆயுத நாடாக மாறியிருக்காது.இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X