கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பாசி' மோசடி வழக்கில் விசாரணை: சாட்சியம் ஆயிரத்தை நெருங்குகிறது

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:பாசி நிறுவனம், 870 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், துரித விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூரில் செயல்பட்ட 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக, 870 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் விசாரணை, கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர், ஜாமினில் வெளியே வந்து,

கோவை:பாசி நிறுவனம், 870 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், துரித விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூரில் செயல்பட்ட 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக, 870 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் விசாரணை, கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர், ஜாமினில் வெளியே வந்து, விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகி வருகின்றனர்.
வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 11 ஆண்டாகியும் விசாரணை முடியாமல் தொடர்ந்து தாமதம் ஆகிறது. மொத்தம், 1,433 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.15 நாட்களுக்கு ஒரு முறை வாய்தா போடப்பட்டு, குறைந்த அளவில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். தினசரி வழக்கை விசாரிக்கும் வகையில், சாட்சிகளை கோர்ட்டிற்கு அழைத்து வர நீதிபதி ரவி உத்தரவிட்டிருந்தார். வரும் 28 வரை, அனைத்து வேலை நாட்களிலும் விசாரணை நடத்த, தேதி வாரியாக சாட்சிகளை அழைத்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 11ம் தேதி முதல், துரித விசாரணை நடந்து வருகிறது. இம்மாத முடிவில், ஆயிரம் சாட்சிகளிடம் விசாரணை முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X