சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாமியாரை மிரட்டிய மருமகன் மீது வழக்கு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:மாமியார் குளிப்பதை படம் எடுத்து வைத்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டிய ஐ.டி., ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.துடியலுார், ஜி.என்., மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் மனோஜ், 36; ஐ.டி., நிறுவன ஊழியர். இவருக்கும் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த லாரி நிறுவன மேலாளரின் இரண்டாவது மகளுக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்

கோவை:மாமியார் குளிப்பதை படம் எடுத்து வைத்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டிய ஐ.டி., ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.துடியலுார், ஜி.என்., மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் மனோஜ், 36; ஐ.டி., நிறுவன ஊழியர். இவருக்கும் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த லாரி நிறுவன மேலாளரின் இரண்டாவது மகளுக்கும் 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன் குடும்ப தகராறு காரணமாக, மனைவியை ஐ.டி., ஊழியர் தாக்கினார்.
இதுகுறித்து மனைவி போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இதன்பின் இருவரும் சமாதானமாகி ஒன்றாக வாழ்ந்தனர். அப்போது ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாமனார் வீட்டுக்கு சென்று தங்கிய ஐ.டி., ஊழியர், முன்பு மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னைக்கு பழிதீர்க்கும் வகையில், மாமியார் குளிப்பதை படம் எடுத்துள்ளார். பின், வீடியோ பதிவை காட்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாமனார், ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக, ஐ.டி., ஊழியரின் தந்தை தர்மராஜ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கோமதி, சுகன்யா, கார்த்திக் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X