சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீபாவளி நேர போக்குவரத்து நெரிசல்: சமாளிக்க வியாபாரிகளுடன் ஆலோசனை

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.நாடு முழுவதும் நவ.,4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக டவுன்ஹால், காந்திபுரம், நுாறடி ரோடு, ஒப்பணக்கார வீதி உட்பட முக்கிய இடங்களில் துணி, பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவு வர துவங்கியுள்ளனர்.வார இறுதி நாட்கள்

கோவை:தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.நாடு முழுவதும் நவ.,4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக டவுன்ஹால், காந்திபுரம், நுாறடி ரோடு, ஒப்பணக்கார வீதி உட்பட முக்கிய இடங்களில் துணி, பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவு வர துவங்கியுள்ளனர்.வார இறுதி நாட்கள் மட்டுமின்றி, வார நாட்களிலும் அதிக கூட்டம் கூடுகிறது. இதனால் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, வியாபாரிகளுடன் போலீசார் நேற்று கலந்தாலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில், வாடிக்கையாளர்கள் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வியாபாரிகளின் தேவைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.அப்போது போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், வியாபாரம் செய்ய கடை உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுரைகளை வழங்கினர்.ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் வரும் வாகனங்கள் வேறு ரோடுகள் வழியாக மாற்றம் செய்வது, பார்க்கிங் வசதிகள் செய்து கொடுப்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சிற்றரசு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X