தமிழ்நாடு

இரு மாதங்களில் 3,616 பேருக்கு 'கடி': நாய்கள் ஜாக்கிரதை! பிடித்து அடக்க மாநகராட்சி அதிரடி

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவமனையில், கடந்த இரண்டு மாதங்களில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால் நகரில் நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த, நாய்களை பிடிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை களமிறங்கியுள்ளது.கோவை மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதை காண
இரு மாதங்களில் 3,616 பேருக்கு 'கடி': நாய்கள் ஜாக்கிரதை! பிடித்து அடக்க மாநகராட்சி அதிரடி

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், கடந்த இரண்டு மாதங்களில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால் நகரில் நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த, நாய்களை பிடிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை களமிறங்கியுள்ளது.
கோவை மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகரின் பல்வேறு இடங்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதை காண முடிகிறது. அவ்வாறு சுற்றும் சில நாய்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளை கடித்து விடுகின்றன.கோவை அரசு மருத்துவமனையில், சாதாரண நாய் கடிக்கு ரேபீஸ் தடுப்பூசியும், வெறிநாய்க்கடி மற்றும் நாய்க்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'ரேபிஸ் இம்யூனோகுளோபுளின்' ஊசியும் செலுத்தப்படுகிறது.
அதன்படி கடந்த ஆக., மற்றும் செப்.,மாதங்களில் மட்டும் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக பதற வைக்கிறார், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா.இதுகுறித்து அவர் கூறுகையில், ''இந்தாண்டு ஆக.,மாதத்தில் 1,816 பேர், செப்.,மாதத்தில் 1,800 பேர் என மொத்தம் 3,616 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். கோவையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய்க்கடிக்கான தடுப்பூசி உள்ளது.
நாய் கடித்த 6 மணி நேரத்துக்குள், மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே, புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள், இங்கு வந்துதான் தடுப்பூசி போட வேண்டுமென்பதில்லை,'' என்றார்.
மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஸ்குமார், ''விலங்குகள் நல வாரியத்தின் மூலமாக, இரண்டு தனியார் அமைப்புகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள், நேற்று முதல் கோவையின் ஐந்து மண்டலங்களிலும், தெருநாய்கள் அதிகம் இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்து, பிடித்து வருகின்றனர். பிரச்னைக்குரிய இடங்களில் நாய் பிடிப்பதை, தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
வரவேற்க வேண்டிய இந்த உத்தரவை, முழுமையாக நடைமுறைப்படுத்தும் வரை மாநகராட்சி ஓயக்கூடாது. ஏனென்றால், நாய்களை பிடிக்கும் அமைப்பினர் அவற்றுக்கு கருத்தடை செய்து, பிடித்த இடங்களில் மீண்டும் விட்டு விடுவர். குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளாவது தொடர்ந்து இப்பணியை மேற்கொண்டால் மட்டுமே, ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
நாய் கடித்தவுடன் என்ன செய்யணும்?
டீன் நிர்மலா கூறுகையில், ''நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை, 5 நிமிடங்கள் ரத்தம் வெளியேறும் வரை நன்கு கழுவ வேண்டும். ஒருவேளை கடித்தது வளர்ப்பு நாயாக இருந்தால், வெறிநோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறதா என தொடர்ந்து 10 நாட்கள் கண்காணிக்க வேண்டும். எந்த நாய் கடித்திருந்தாலும், கடித்த அன்றே தடுப்பூசி போட வேண்டும்.முதல் தடுப்பூசி மட்டும் போட்டு விட்டு, நிறுத்திவிடக்கூடாது. குழந்தைகளை நாய் கடித்து விட்டது, பிறாண்டியது என சந்தேகம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி, அதை உறுதி செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-202107:05:32 IST Report Abuse
அப்புசாமி ரெண்டு வருஷமா மக்களைப் போட்டு முடக்கினதுல பாவம் இந்த வாயில்லா ஜீவன்களுக்கு சோறு தண்ணி கிடையாது. ஜோரா கை, தட்டி வெளக்கேத்துங்க.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-அக்-202105:45:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் // கோவை மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.//
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X