அரசியல் செய்தி

தமிழ்நாடு

சீரபாளையம் ஊராட்சியில் தி.மு.க.,வெற்றி

Added : அக் 13, 2021
Share
Advertisement
மலுமிச்சம்பட்டி:மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்டது, சீரபாளையம் கிராம ஊராட்சி. இதன் நான்காவது வார்டு உறுப்பினர் நாகராஜ் உடல் நலக்குறைவால் இறந்தார். அவ்வார்டுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு, கடந்த 9ல் நடந்தது.368 வாக்காளர்கள் அடங்கிய இவ்வார்டு, ஆதிதிராவிடருக்கு பொதுவானதாகும். இப்பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் தி.மு.க., ஆதரவுடனும், நாகராஜ், கதிர்வேல், மதன்குமார் ஆகியோர்

மலுமிச்சம்பட்டி:மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்டது, சீரபாளையம் கிராம ஊராட்சி. இதன் நான்காவது வார்டு உறுப்பினர் நாகராஜ் உடல் நலக்குறைவால் இறந்தார். அவ்வார்டுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு, கடந்த 9ல் நடந்தது.368 வாக்காளர்கள் அடங்கிய இவ்வார்டு, ஆதிதிராவிடருக்கு பொதுவானதாகும். இப்பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் தி.மு.க., ஆதரவுடனும், நாகராஜ், கதிர்வேல், மதன்குமார் ஆகியோர் சுயேட்சைகளாகவும் போட்டியிட்டனர்.மொத்தம், 334 பேர் ஓட்டு போட்டனர். மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலர் சுதாகரன் மேற்பார்வையில் நேற்று காலை, 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடந்தது.ஒன்றேகால் மணி நேரத்தில் எண்ணி முடிக்கப்பட்டன. இதில் ஜெயபிரகாஷ், 168, மதன்குமார், 98, கதிர்வேல் ஒன்பது மற்றும் நாகராஜ், 57 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இரு ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.இதையடுத்து, ஜெயபிரகாஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X