பொது செய்தி

தமிழ்நாடு

வருமுன் காப்போம் முகாமில் 1,040 பேருக்கு பரிசோதனை

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி சார்பில் நேற்று நடந்த வருமுன் காப்போம் முகாமில், 1,040 பேர் பயனடைந்தனர்.கோவை, 42வது வார்டு, சின்ன வேடம்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், வருமுன் காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை, கமிஷனர் ராஜகோபால் வழங்கி, முகாமை துவக்கி வைத்தார்.மொத்தம், 21 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கோவை:கோவை மாநகராட்சி சார்பில் நேற்று நடந்த வருமுன் காப்போம் முகாமில், 1,040 பேர் பயனடைந்தனர்.கோவை, 42வது வார்டு, சின்ன வேடம்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், வருமுன் காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை, கமிஷனர் ராஜகோபால் வழங்கி, முகாமை துவக்கி வைத்தார்.மொத்தம், 21 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. கண், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்டது.இலவசமாக ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., மற்றும் எக்கோ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.மொத்தம், 326 ஆண்கள், 714 பெண்கள் என, 1,040 பேர் பங்கேற்றனர். இதில், 228 பேர் கண் பரிசோதனை, 360 பேர் பல் பிரச்னைக்கு சிகிச்சை பெற்றனர்.இருதயம் தொடர்பான பிரச்னைக்கு, 80 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 276 பேர் சித்தா சிகிச்சை எடுத்துக் கொண்டனர். 118 பேருக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் எடுக்கப்பட்டது.மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அருணா, நகர் நல அலுவலர் சதீஷ்குமார், உதவி கமிஷனர் மோகனசுந்தரி, உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X