பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ மாணவர்களுக்கு கூடுதலாக 100 சீட் ; டீன் நம்பிக்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், எம்.பி.பி.எஸ்.,படிப்புக்கு நடப்பாண்டிலேயே 100 சீட்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, டீன் நிர்மலா தெரிவித்தார்.கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 150 பேர், முதுநிலை மாணவர்கள் 200 பேர் படிக்கின்றனர். இந்நிலையில், எம்.பி.பி.எஸ்.,இடங்களின் எண்ணிக்கையை 150லிருந்து 250 ஆக அதிகரிக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை

கோவை:கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், எம்.பி.பி.எஸ்.,படிப்புக்கு நடப்பாண்டிலேயே 100 சீட்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, டீன் நிர்மலா தெரிவித்தார்.கோவை அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் 150 பேர், முதுநிலை மாணவர்கள் 200 பேர் படிக்கின்றனர். இந்நிலையில், எம்.பி.பி.எஸ்.,இடங்களின் எண்ணிக்கையை 150லிருந்து 250 ஆக அதிகரிக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக, கல்லுாரி நிர்வாகம் சார்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டது.இதையடுத்து, கடந்த 8 மற்றும் 9ம் தேதி அரசு மருத்துவக்கல்லுாரியில் டில்லி தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்களின் தகுதிகள், வகுப்பறைகள், நுாலகங்கள், உள் கட்டமைப்பு வசதிகள், மருத்துவ மாணவர்களுக்கான விடுதிகள், உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் எவ்வித குறைகளும் சுட்டிக்காட்டப்படவில்லை.இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள், 100 இடங்களை உயர்த்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதாக தெரிவித்தனர். இந்த ஆய்வில், எவ்வித குறைகளும் சுட்டிக்காட்டப்படவில்லை. தொடர்ந்து, டில்லி தேசிய மருத்துவ ஆணையத்தில், அதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.அதன்பின்னரே, 100 சீட்கள் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகும். அதன்படி, நடப்பாண்டிலேயே எம்.பி.பி.எஸ்.,மருத்துவ பிரிவில், 100 இடங்கள் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.இதன் மூலம், எதிர்காலத்தில் பயிற்சி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில், மருத்துவர்களின் பற்றாக்குறை வராமல் சமாளிக்க முடியும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X