பொது செய்தி

தமிழ்நாடு

கால் டாக்ஸி டிரைவர்கள் கட்டண உயர்வுக்கு கோரிக்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:கட்டணத்தை உயர்த்தி தர கோரி, கொடிசியா மைதானத்தில் கால் டாக்சி டிரைவர்கள் தங்களது கார்களை நிறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், 'பெட்ரோல், டீசல், இதர பொருட்களின் விலை உயர்ந்த நிலையில், 2014ம் ஆண்டு கட்டணமே தற்போதும் வழங்கப்படுகிறது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. கால் டாக்ஸி நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி தர மறுக்கின்றன. பத்து கி.மீ.,க்கு, 200

கோவை:கட்டணத்தை உயர்த்தி தர கோரி, கொடிசியா மைதானத்தில் கால் டாக்சி டிரைவர்கள் தங்களது கார்களை நிறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், 'பெட்ரோல், டீசல், இதர பொருட்களின் விலை உயர்ந்த நிலையில், 2014ம் ஆண்டு கட்டணமே தற்போதும் வழங்கப்படுகிறது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. கால் டாக்ஸி நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி தர மறுக்கின்றன. பத்து கி.மீ.,க்கு, 200 ரூபாய் வழங்கப்படும் நிலையில், நாங்கள் கார் ஓட்டும் நிறுவனத்துக்கு, 60 ரூபாய் போக, 140 ரூபாய் தான் தங்களுக்கு கிடைக்கிறது. இதனால் ஒரு கி.மீ.,க்கு 25 ரூபாய் வீதம், 10 கி.மீ.,க்கு, 250 ரூபாய் வழங்க வேண்டும். இதனால் எங்கள் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். இந்த கோரிக்கையை மக்கள் முன்பும் வைக்கிறோம்' என்றனர்.ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட கால் டாக்ஸி டிரைவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X