பொது செய்தி

தமிழ்நாடு

மெய் சிலிர்க்க வைக்குதே... நவராத்திரி கொலு வைபவம்!

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியருக்கு உரித்தானது. இந்த நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள், வீரத்தையும் தைரியத்தையும் வேண்டி வரவழைப்பதற்காக, அன்னை துர்கையை வழிபடுகின்றனர்.அடுத்த மூன்று நாட்கள் அனைத்து ஐஸ்வர்யங்களையும் வேண்டி மகாலட்சுமியை வழிபடுகின்றனர். கடைசி மூன்று நாட்கள் கல்வி, ஞானம், கலைகள் வேண்டி கலைமகளை வணங்குகின்றனர்.பத்தாம்

கோவை:நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியருக்கு உரித்தானது. இந்த நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள், வீரத்தையும் தைரியத்தையும் வேண்டி வரவழைப்பதற்காக, அன்னை துர்கையை வழிபடுகின்றனர்.அடுத்த மூன்று நாட்கள் அனைத்து ஐஸ்வர்யங்களையும் வேண்டி மகாலட்சுமியை வழிபடுகின்றனர். கடைசி மூன்று நாட்கள் கல்வி, ஞானம், கலைகள் வேண்டி கலைமகளை வணங்குகின்றனர்.பத்தாம் நாளான விஜய தசமியில், மூவரும் இணைந்த கோலமான ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, ஸ்ரீமூகாம்பிகை, ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீகமலாம்பிகை போன்ற மகாசக்திகளை வழிபட வேண்டும்.இந்த நவராத்திரி காலங்களில், ஒவ்வொரு மாலைப் பொழுதிலும் முப்பெரும் தேவியரும் ஒவ்வொரு சூட்சும வடிவம் கொண்டு வீடுகளில் வியாபித்திருந்து, பக்தர்களை ஆசிர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.அதன்படி வன துர்கை, சூலினி துர்கை, ஜாதவேதோ துர்கை, ஜூவாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, ஆகரி துர்கை, லவண துர்கை, அம்பிகை என, ஒன்பது நாளும் முறையே எழுந்தருவர்.அதேபோல் திருமகளான ஆதிலட்சுமி, மகாலட்சுமி, தனலட்சுமி, தானிய லட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, தைரிய லட்சுமி என ஒன்பது நாட்களுக்கு ஒன்பது லட்சுமியர் எழுந்தருளுவர்.வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, காயத்ரி, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி என்ற உருவில், கலைமகளும் கொலுபடிகள் வைத்திருக்கும் வீடுகளில் எழுந்தருளுவர் என்பது நம்பிக்கை.முப்பெரும் தேவியரும் மனமுவந்து, நம் இல்லங்களில் எழுந்தருளும் இந்த இனிய விழாவில் அம்பிகையரின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும்.அதனாலேயே கொலுப்படிகளை வைத்து அழகு பார்த்து இறைவனை இருகரம் கூப்பி வணங்குவதும், ஆடல், பாடல், இசையில் ஈடுபடுவதும் நவராத்திரி நாட்களில் பாரம்பரியமாய் தொடர்ந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X