பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவாணியில் 120 மி.மீ., மழை

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 120 மி.மீ., மழை பதிவானதால், 44.36 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 120 மி.மீ., மழை பதிவானதால், 44.36 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. சிற்றருவிகளில் நீர் வரத்து காணப்படுவதால், நீர் மட்டம் மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மொத்த கொள்ளளவில், 90 சதவீதத்துக்கு நீர் இருப்பு

கோவை:சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 120 மி.மீ., மழை பதிவானதால், 44.36 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணை பகுதியில், 120 மி.மீ., மழை பதிவானதால், 44.36 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. சிற்றருவிகளில் நீர் வரத்து காணப்படுவதால், நீர் மட்டம் மேலும் உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மொத்த கொள்ளளவில், 90 சதவீதத்துக்கு நீர் இருப்பு இருக்கிறது.வழக்கமாக, தென்மேற்கு பருவ மழை சமயத்தில் ஒரு முறையும், வடகிழக்கு பருவ மழை சமயத்தில் ஒருமுறையும் அணை நிரம்பி வழியும். ஆனால், பாதுகாப்பு காரணங்களை கூறி, சில ஆண்டுகளாக, முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கப்படுவதில்லை. தற்போது நீர் கசிவு இருப்பதால், 45 அடிக்கே தேக்கப்படும் என, கேரள நீர்ப்பாசனத்துறை கூறியுள்ளது. எனவே, அணையின் மொத்த கொள்ளளவான, 50 அடிக்கு தண்ணீர் தேக்காமல், கடந்தாண்டை போல், மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்ற வாய்ப்பிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X