பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்தணும்: மத்திய அரசுக்கு சைமா வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்தணும்: மத்திய அரசுக்கு சைமா வேண்டுகோள்

Added : அக் 13, 2021
Share
கோவை:"பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த, இந்திய பருத்தி கழகம் கையிருப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்," என தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் ரவி சாம் தெரிவித்துள்ளார்.கடந்த 11 சீசன்களில் இல்லாத அளவு, தற்போது பருத்தியின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 15 நாட்களில் 25 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.இந்தியாவில் பருத்தி கையிருப்பு போதிய அளவில் இருந்த போதும் சங்கர் 6

கோவை:"பருத்தி விலை உயர்வை கட்டுப்படுத்த, இந்திய பருத்தி கழகம் கையிருப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்," என தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் ரவி சாம் தெரிவித்துள்ளார்.கடந்த 11 சீசன்களில் இல்லாத அளவு, தற்போது பருத்தியின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 15 நாட்களில் 25 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.இந்தியாவில் பருத்தி கையிருப்பு போதிய அளவில் இருந்த போதும் சங்கர் 6 வகை பருத்தியின் விலை, டிசம்பர் 2020ல் கண்டி ஒன்றுக்கு ரூ.40 ஆயிரத்து 900 ஆக இருந்தது. அக்டோபர் முதல் வாரத்தில் ரூ.57 ஆயிரமாக உயர்ந்துள்ளது.2021- - 22 பருத்தி சீசன் துவக்கத்தில் கையிருப்பு 100 லட்சம் பேல்களாக இருந்தது. நடப்பாண்டில் 350 லட்சம் பேல்கள் உள்நாட்டுத் தேவைக்கு அவசியமாக உள்ளது.பருத்தி உற்பத்தியில் 10 சதவீதத்தை கொண்டிருக்கும் சீனாவின் பருத்திக்கு, அமெரிக்கா தடை விதித்ததால் இந்திய பருத்தி ஏற்றுமதி 100 லட்சம் பேல்களை தாண்டும் அபாயம் உள்ளது. எனவே ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதுடன், உள்நாட்டுத் தேவைக்கு அதிக அளவில் பருத்தி கையிருப்பில் வைக்க வேண்டும்.பருத்தி விலையை நிலைப்படுத்தும் நோக்குடன், பருத்தி கையிருப்பு திட்டத்தை இந்திய பருத்தி கழகம் உருவாக்க வேண்டும்.மத்திய அரசு, தேவையான நிதியை குறைந்த வட்டியில் அளித்து, உற்பத்தியாகும் 10 முதல் 15 சதம் பருத்தியை, இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்து இருப்பு வைக்க அனுமதிக்க வேண்டும். பருத்தி சீசன் அல்லாத காலங்களில், இந்த பருத்தியை மில்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, ரவி சாம் தெரிவித்துள்ளார்.பருத்தி உற்பத்தியில் 10 சதவீதத்தை கொண்டிருக்கும் சீனாவின் பருத்திக்கு, அமெரிக்கா தடை விதித்ததால் இந்திய பருத்தி ஏற்றுமதி 100 லட்சம் பேல்களை தாண்டும் அபாயம் உள்ளது. எனவே ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதுடன், உள்நாட்டுத் தேவைக்கு அதிக அளவில் பருத்தி கையிருப்பில் வைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X