இந்தியா

மின்வெட்டு பிரச்னை: பிரதமர் ஆலோசனை

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : கடும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக பல மாநிலங்கள் கூறிஉள்ள நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். ''யாரும் பயப்படத் தேவையில்லை,'' என, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.நிலக்கரி வாயிலாக மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களில் சில நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு
மின்வெட்டு பிரச்னை: பிரதமர் ஆலோசனை

புதுடில்லி : கடும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக பல மாநிலங்கள் கூறிஉள்ள நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். ''யாரும் பயப்படத் தேவையில்லை,'' என, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.

நிலக்கரி வாயிலாக மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களில் சில நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், கடும் மின் வெட்டை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் பல மாநிலங்கள்கூறியுள்ளன.


latest tamil news



தமிழகம், டில்லி, பஞ்சாப், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கூடுதல் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளன.இந்தப் பிரச்னை தொடர்பாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோருடன், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.



அதிகாரிகள் விளக்கம்



இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், அமைச்சர்கள் ஆர்.கே.சிங், பிரஹலாத் ஜோஷி மற்றும் துறைச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிலக்கரி கையிருப்பு நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு
அதிகாரிகள் விளக்கி உள்ளனர்.இந்த சந்திப்புக்குப் பின் அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளதாவது:

சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நிலக்கரி சுரங்கங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால், அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை அனுப்புவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பயம் தேவையில்லைநம்மிடம் போதிய அளவில் நிலக்கரி உள்ளது. அதனால் மின் வெட்டு ஏற்படும் என்ற பயம் தேவையில்லை.அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் மட்டும் 19.5 லட்சம் டன் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. பருவ மழை குறைந்ததும் 21ம் தேதிக்குப் பின் அதிக அளவில் நிலக்கரி அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-202111:09:19 IST Report Abuse
ஆரூர் ரங் பெரும்பாலான மாநில மின்வாரியங்கள் கோல் இந்தியா மற்றும் பவர் கிரிட் நிறுவனங்களுக்கு🙄 நிலக்கரி மற்றும் மின் கடத்தி கட்டண பாக்கி வைத்திருப்பதால் நிலக்கரி சப்ளை யில் சுணக்கம்.
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
13-அக்-202110:07:32 IST Report Abuse
Sandru மோடி எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டார் . ஆனால் நன்றாக வாயால் வடை சுடுவார். லாபத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை ஆட்டை போட்டு குஜராத் நண்பர்களுக்கு பரிசளிப்பார்.
Rate this:
13-அக்-202112:19:11 IST Report Abuse
ஆரூர் ரங்ப சிதம்பரம் அமைச்சராக இருந்த போது சொன்னது/. தனியார் நிறுவனங்கள் மிகவும் திறமையுள்ள நிறுவனங்கள். அதனால் அரசு உடமைகளை தனியார் மயம் ஆக்குவதில் தவறு இல்லை/ ..சிதம்பரம் 🤔காங்கிரசு ஆட்சியில் சொன்னதைதானே தற்போது நஷ்டத்தை காட்டி அரசிலுக்கு இழப்பு ஏற்படுத்தும் பொது நிறுவனங்களை தனியார் மையம் ஆக்கி நஷ்டத்தை சரி செய்து வருகிறார் நமது பாரத பிரதமர் மோதி?...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-அக்-202108:58:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சொம்பை தட்டினா லைட்டு எரியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X