பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்கள் திறப்பா? இன்று முடிவு!

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (11+ 42)
Share
Advertisement
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் வகையில், வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூடியிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. வரும், 15ம் தேதி விஜயதசமி வருகிறது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாள்.எனவே, வெள்ளி அன்று கோவில்களை திறக்க
கோவில்கள் திறப்பா? இன்று முடிவு!

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் வகையில், வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூடியிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. வரும், 15ம் தேதி விஜயதசமி வருகிறது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாள்.எனவே, வெள்ளி அன்று கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்துாஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


latest tamil news



அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''மத்திய அரசின் வழிமுறைகளை அரசு அமல்படுத்துகிறது. முதல்வர் தலைமையில், இன்று நிபுணர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், கோவில்கள் திறப்பு பற்றி முடிவெடுப்பர்,'' என்றார்.இதையடுத்து, 'அரசு முடிவெடுக்க உள்ளதால், நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11+ 42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
13-அக்-202111:35:48 IST Report Abuse
M S RAGHUNATHAN கோயில் கதவுகளை மூடுவார்கள். ஆனால் கோயில் வாசலில் உண்டியல் வைப்பார்கள். வரும் பக்தர்கள் யாரும் HRCE வைத்திருக்கும் உண்டியலில் காணிக்கை போடக்கூடாது. ஏனெனில் உண்டியல் காசை எடுத்து சமோசா, பிரியாணி இனிப்பு ஆகியவற்றை வாங்கி Meeting நடத்துகிறார்கள். வெட்கம் கெட்ட அரசு, மானம் இல்லாத அறநிலையத் துறை.கோயிலை திறக்க மாட்டார்களாம் ஆனால் கோயில் உண்டியல் பணம், வருமானம் மட்டும் வேண்டுமாம்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
13-அக்-202109:30:00 IST Report Abuse
தமிழ்வேள் கோவில்கள் திறக்கப்படவில்லை என்றால் , நேற்று நாகர்கோவிலில் நடந்ததைப்போல , கோவில் கதவின் பூட்டை உடைத்து தரிசனம் செய்யும் பக்தர் கூட்டம் பெருகிவிடும் ..ஊருக்கு ஊர் இம்மாதிரி நடந்தால் , கேவலம் விடியல் அரசுக்கு தானெ தவிர , ஆஸ்திகர்களுக்கோ , மற்ற பொது மக்களுக்க்க்கோ அல்ல ...மேலும் அசிங்கப்படாமல் இருக்க விடியல் நாஸ்திக ஆபிரகாமிய அடிமை அரசு , கோவில்களை திறப்பது ஒன்றே வழி .. முகத்தில் காறித்துப்பப்பட்ட விடியல் அரசுக்கு , மானம் ரோஷம் இருக்கிறதா ? இல்லை , துடைத்து எறிந்துவிட்ட ஜென்மங்களா ? என்பது இன்று தெரியவரும் ...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
13-அக்-202109:14:49 IST Report Abuse
duruvasar உண்மைக்கு புறம்பான விஷயத்தை அஃப்பிடவிட்டாக கொடுத்ததற்க்கு அரசு வழக்கறிஞர் மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X