பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் விடுமுறை தினங்களில் மோசடி கும்பல் குறித்து எச்சரிக்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'தொடர் பண்டிகைகால விடுமுறை தினங்கள் மற்றும் தீபாவளி நெருங்குவதால் மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.இணையதள மோசடிகள் பல்வேறு விதங்களில் அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களாக வார இறுதி நாட்கள் அல்லது பண்டிகை காலங்களில் வங்கிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. இவற்றை மோசடி

திண்டுக்கல் : 'தொடர் பண்டிகைகால விடுமுறை தினங்கள் மற்றும் தீபாவளி நெருங்குவதால் மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இணையதள மோசடிகள் பல்வேறு விதங்களில் அதிகரித்து வருகின்றன. சமீப காலங்களாக வார இறுதி நாட்கள் அல்லது பண்டிகை காலங்களில் வங்கிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது. இவற்றை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஏனெனில் வங்கிகள் செயல்படும் நாட்களில்தான் வங்கி கணக்கை முடக்க முடியும். இதனால் விடுமுறை தினங்களை மையமாக வைத்து மோசடிகள் நடக்கின்றன.இந்த வாரம் சரஸ்வதி, ஆயுத பூஜை, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் வங்கிகளுக்கும் விடுமுறை. அதே நேரத்தில் தீபாவளி நெருங்குவதால் கூடுதல் கவனம் தேவை என போலீசார் எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்துகின்றனர்.தீபாவளிக்கு பல்வேறு சலுகைகளுடன் பட்டாசு, பலகாரம் முதல் துணி வரை ஆன்லைன் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனை பயன்படுத்தும் மோசடி கும்பல்கள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்பமுடியாத வகையில் சலுகைகளை அறிவித்து விளம்பரப்படுத்துகின்றன. அலைபேசி, கணினி, இனிப்பு, பலகாரம், பட்டாசுகள், துணிகள், பர்னிச்சர் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என பலவற்றுக்கும் சலுகை அறிவித்து பொதுமக்களை கவர்கின்றனர்.

இதற்கு பெரும்பாலும் முன்பணம் கட்டச் சொல்கின்றனர். பணம் செலுத்தியபின்பே அது போலி இணையதளம் என்பது தெரிய வரும். அதேபோல் இ மெயில், குறுஞ்செய்தி, ஓ.டி.பி., என அனைத்து வழிகளிலும் மோசடி முயற்சிகள் நடக்கும்.போலீசார் தெரிவிக்கையில், 'விடுமுறை தினங்களில்தான் கூடுதல் கவனம் தேவை. பணம் இழந்தவுடன் தெரிவித்தால் வங்கி கணக்கை உடனே முடக்க முடியும். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X