பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில்மாணவியர் சேர்க்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி அக்.30 வரை நடக்க உள்ளது.இரண்டு ஆண்டுகள் கம்மியர் கருவிகள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப மற்றும் சாதனங்கள் பராமரிப்பு படிப்பு, ஓராண்டு டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர், நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் படிப்பில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தையல், அலங்கார

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மகளிர் ஐ.டி.ஐ.,யில் தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி அக்.30 வரை நடக்க உள்ளது.

இரண்டு ஆண்டுகள் கம்மியர் கருவிகள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப மற்றும் சாதனங்கள் பராமரிப்பு படிப்பு, ஓராண்டு டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர், நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் படிப்பில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தையல், அலங்கார பூத்தையல் தொழில்நுட்ப படிப்பில் சேர 8 அல்லது 10 ம் வகுப்பு தேர்ச்சி, 2 ஆண்டு திறன் மின்னணுவியல் தொழில்நுட்ப பணியாளர் படிப்பிற்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

இப்படிப்புகளுக்கு என்.சி.வி.டி., சான்றிதழ் வழங்கப்படும். மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, இலவச சைக்கிள், பஸ் பாஸ், காலணிகள், வரைபட கருவிகள், கணினி பயிற்சி, தங்கும் விடுதி, பாடப்புத்தகங்கள், அடையாள அட்டை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் திண்டுக்கல் நத்தம் ரோட்டில் உள்ள மகளிர் ஐ.டி.ஐ., முதல்வரை சந்தித்து, அக்.30 க்குள் சேரலாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X