பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர கிணறுகளால் ஆபத்து

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்புவனம் : நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநிலநெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளை ஒட்டியுள்ள திறந்த வெளி சாலையோர கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மதுரை - ராமேஸ்வரம் சாலையில் வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றன.குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பலரும் இச்சாலையை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

திருப்புவனம் : நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநிலநெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளை ஒட்டியுள்ள திறந்த வெளி சாலையோர கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதுரை - ராமேஸ்வரம் சாலையில் வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றன.குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பலரும் இச்சாலையை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மணலுார் கண்மாய் அருகே கடந்த இரு வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது.இன்று வரை யார் என தெரியவில்லை. தட்டான்குளம் தடுப்பணை, வாகுடி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் பெண் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின் அடையாளம் காணப்பட்டது. நான்கு வழிச்சாலையில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றச்சம்பவங்களில் முன்னேற்றம் இருப்பதில்லை.திருப்புவனத்தில் நேற்று முன்தினம் விவசாய கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட வாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் சாலையோரம் உள்ள கிணறுகளை மூடி பாதுகாப்பாக வைக்க வலியுறுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்னமும் பாதுகாப்பில்லாத கிணறுகள் அதிகம் உள்ளன. வேறு பகுதிகளில் கொலை செய்து விட்டு உடலை கொண்டு வந்து வீசி செல்கின்றனர்.நகர்ப்பகுதியில் வாகனச்சோதனை நடத்தும் போலீசார் நான்கு வழிச்சாலையில் வாகனச்சோதனை நடத்துவது இல்லை. இதனால் குற்றச்சம்பவங்களில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X