தமிழ்நாடு

வாழை விலை விவசாயிகளுக்கு போதிய பயன்தரவில்லை

Added : அக் 13, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் வாழை விளைச்சல் அதிகரிப்பு காரணமாக மலம்பட்டி சந்தைக்கு அதிகளவில் வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தது. விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.மலம்பட்டியில் வாழை சந்தை வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி நடக்கும். சுற்று வட்டாரப்பகுதிகளான சருகுவலையபட்டி, கீழப்பூங்குடி, கீழையூர், சுக்காம்பட்டி, சூரக்குண்டு, வெள்ளாளபட்டி, சாலுார், கொட்டகுடி,
வாழை விலை விவசாயிகளுக்கு போதிய பயன்தரவில்லை

சிவகங்கை : சிவகங்கையில் வாழை விளைச்சல் அதிகரிப்பு காரணமாக மலம்பட்டி சந்தைக்கு அதிகளவில் வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தது.

விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.மலம்பட்டியில் வாழை சந்தை வாரம் தோறும் செவ்வாய், வெள்ளி நடக்கும். சுற்று வட்டாரப்பகுதிகளான சருகுவலையபட்டி, கீழப்பூங்குடி, கீழையூர், சுக்காம்பட்டி, சூரக்குண்டு, வெள்ளாளபட்டி, சாலுார், கொட்டகுடி, மானாமதுரை, மேலுார் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் வாழை தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை காரணமாக வாழைத்தார்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். விவசாயிகள் எதிர்பார்த்த அளவு விலை கிடைக்கவில்லை. விளைச்சல் அமோகமாக இருந்ததால்ரஸ்தாளி, நாடு, பூவன், பச்சை, ஒட்டுரகங்கள் விற்பனைக்கு வந்திருந்தன.நாடு ரக தார்கள் 150 முதல் 400 ரூபாயாகவும், பூவன் ரகம் 100 முதல் 500 ரூபாய், ரஸ்தாளி 100 முதல் 400 ரூபாய், பச்சை 200 முதல் 350 ரூபாய், ஒட்டு ரகம் 200 முதல் 250 ரூபாய் வரை விளைச்சலுக்கு ஏற்ப விற்பனையானது. டி.சரவணன்,வாழை வியாபாரி: வாழைத்தார்கள் விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக அதிகளவு விலை உயர்வுஇல்லை. தாருக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

இது விவசாயிகளுக்கு பெரிய அளவில் பலன் தரவில்லை. வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைந்துள்ளது,என்றார்.எம்.சிராஜ், வாழை வியாபாரி: கொரோனா ஊரடங்கு காலத்தில் சுத்தமாக வாழைத்தார்களுக்கு விலை இல்லாமல் இருந்தது. தற்போது ஒரளவுக்கு விலைஉள்ளது. கோயில்களில் பக்தர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாழை பழ விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. அரசு தடையைநீக்கினால் வாழைக்கு விலை இருக்கும், என்றார்.எஸ்.ராமலிங்கம் வாழை விவசாயி, கள்ளர்வலசை: ஒட்டு ரக காய் விளைச்சல் இருந்தது.மானாமதுரையில் விலை கிடைக்காததால் மலம்பட்டி சந்தைக்கு கொண்டு வந்துள்ளேன்ஒட்டு ரகம் வாழைத்தார் ஒன்றுக்கு 50 முதல் 70 ரூபாய்க்கு விற்பனையானது. கொரோனா காலகட்டத்தில் விலையில்லாமல் மரத்திலேயே பழுத்தது, தற்போது பரவாயில்லை ஒரளவு விலை கிடைக்கிறது,என்றார்.-------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X