பொது செய்தி

தமிழ்நாடு

'கரும்புச்சாலையில் விரும்பும் வசதியில்லையே' குடிநீர், சாலை அவசியம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : நிலக்கோட்டை கரும்புச்சாலை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர் தொட்டி புதிதாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.நிலக்கோட்டை கரும்புச்சாலை பகுதியில் இ.பி.,காலனி, என்.ஜி.ஓ., காலனி, ஆனந்தநகர், நாராயணசாமி நகர், நாகல் நகர் பகுதிகள் அடங்கியுள்ளன. 750 வீடுகள் உள்ளன. விரிவாக்கப் பகுதியாக உள்ளதால் வீடுகள் தொடர்ந்து அதிகரித்து


நிலக்கோட்டை : நிலக்கோட்டை கரும்புச்சாலை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர் தொட்டி புதிதாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

நிலக்கோட்டை கரும்புச்சாலை பகுதியில் இ.பி.,காலனி, என்.ஜி.ஓ., காலனி, ஆனந்தநகர், நாராயணசாமி நகர், நாகல் நகர் பகுதிகள் அடங்கியுள்ளன. 750 வீடுகள் உள்ளன. விரிவாக்கப் பகுதியாக உள்ளதால் வீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இப்பகுதி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், மகாராஜன், லோகபாண்டி, சின்னப்பா, மைக்கேல் கூறியதாவது: குடியிருப்பு பகுதி விரிவடைவதற்கேற்ப அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. மேடான பகுதியாக இருப்பதால் மேல்நிலை தொட்டி தனியாக அமைத்து குடிநீர் விநியோகம் செய்தாக வேண்டும். சில தெருக்கள் குண்டும், குழியுமாக இருப்பதால் சிமென்ட் தளம் அல்லது பேவர் பிளாக் கற்கள் பொருத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளால் ரோடு குறுகலாகி வருகிறது.மழைக்காலம் துவங்குவதற்கு முன் சாக்கடைகளை தூர்வார வேண்டும்.

நிலக்கோட்டை நகர் முழுவதும் ஐந்து நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது என்பதால் நிரந்தர கூட்டு குடிநீர் திட்டம் தேவை. அணையில் இருந்து உபரி நீர் வெளியாகி ஆற்றில் செல்வதால் அந்த நீரை நிலக்கோட்டை பகுதிகளுக்கு மடைமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரும்பு ஆலை ரோடு 40 அடி அகலம் என பதிவேடுகளில் உள்ளது. ஆனால் 10 அடி ரோடு மட்டுமே தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து அதிகமாகி விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ரோட்டை அகலப்படுத்தி செம்பட்டி செல்பவர்களுக்கு புறவழிச்சாலை ஆக மாற்ற வேண்டும். இத்தனை வசதிகளை செய்தால்தான் இப்பகுதியில் குடியிருக்க இயலும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X