பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்து மக்கள் கட்சி பழநியில் போராட்டம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
பழநி : 'பழநி கோயில் இணை ஆணையரை மாற்ற' வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் கோயில் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்.பழநி கோயில் இணை ஆணையரை அவரது அலுவலகத்தில் சந்திக்க தினமும் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை பார்வையாளர் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அவரை சந்திக்க ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் அலுவலகத்திற்கு வந்தார்.

பழநி : 'பழநி கோயில் இணை ஆணையரை மாற்ற' வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் கோயில் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார்.

பழநி கோயில் இணை ஆணையரை அவரது அலுவலகத்தில் சந்திக்க தினமும் மாலை 3:00 முதல் 4:00 மணி வரை பார்வையாளர் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அவரை சந்திக்க ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் அலுவலகத்திற்கு வந்தார். நீண்ட நேரம் காத்திருந்த பின் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.அவர் கூறியதாவது: கோயிலில் 7 நாட்களும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.

பழநி கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கோயில் நகைகளை உருக்கும் எண்ணத்தை அரசு கைவிட வேண்டும். கோயில் அதிகாரியை சந்திக்க முடியாததால் அவரை பணிமாற்றம் செய்து பழநி கோயில் இணை ஆணையராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும், என்றார். கோயில் மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X