பொது செய்தி

தமிழ்நாடு

கீழடியில் மண்துகள் சேகரிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்புவனம் : கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து ஆய்விற்காக மண் துகள் சேகரிக்கப்பட்டன.கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கி செப்டம்பருடன் முடிவடைந்து விட்டது. 4 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் அகழாய்வில் கண்டறியப்பட்டன. அகழாய்வு பணிகள் முடிவடைந்த உடன் குழிகளில் இருந்து ஆய்விற்காக மண் மாதிரிகள் சேகரிக்கப்படும்.இந்தாண்டு

திருப்புவனம் : கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து ஆய்விற்காக மண் துகள் சேகரிக்கப்பட்டன.

கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கி செப்டம்பருடன் முடிவடைந்து விட்டது. 4 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் அகழாய்வில் கண்டறியப்பட்டன. அகழாய்வு பணிகள் முடிவடைந்த உடன் குழிகளில் இருந்து ஆய்விற்காக மண் மாதிரிகள் சேகரிக்கப்படும்.இந்தாண்டு புவியியல் நிபுணர்கள் வராததால் தொல்லியல் துறையினரே மண் மாதிரிகளை சேகரித்தனர். தொல்லியல் துறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது தலைமையில் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்காக அனுப்பப்பட உள்ளன.கடந்த ஆறாம் கட்ட அகழாய்வில் திருவாரூர் மத்திய பல்கலை பேராசிரியர் ஜெயம் கொண்ட பெருமாள் தலைமையிலான குழுவினர் ஆய்விற்காக மண் மாதிரிகளை எடுத்து சென்றனர். அதனுடைய முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X