பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

Added : அக் 13, 2021
Share
Advertisement
நத்தம் : நத்தம் தாலுகா அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இலங்கை அகதியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கீழ்புத்துபட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் மனோரஞ்சிதம் 50. இவரது சகோதரர் ஆதி பெயரில் நத்தம் ஒன்றியம் மணக்காட்டூரில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அருகிலுள்ள வீராசாமி, பொன்னையா ஆகியோர் அனுபவித்து வந்துள்ளனர்.மனோரஞ்சிதத்தின் சகோதரர்

நத்தம் : நத்தம் தாலுகா அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இலங்கை அகதியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கீழ்புத்துபட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் மனோரஞ்சிதம் 50.

இவரது சகோதரர் ஆதி பெயரில் நத்தம் ஒன்றியம் மணக்காட்டூரில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அருகிலுள்ள வீராசாமி, பொன்னையா ஆகியோர் அனுபவித்து வந்துள்ளனர்.மனோரஞ்சிதத்தின் சகோதரர் நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவுப்படி பலமுறை வலியுறுத்தியும் வருவாய்த் துறையினர் நிலத்தை அளந்து தரவில்லை எனக்கூறி, நேற்று நத்தம் தாலுகா அலுவலகத்தில் மனோரஞ்சிதம் சகோதரர் மற்றும் மகள் மணிமாலாவுடன் தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர்களை தடுத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X