மாடு மாலை தாண்டும் வித்தியாச திருவிழா நத்தம் அருகே நடந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாடு மாலை தாண்டும் வித்தியாச திருவிழா நத்தம் அருகே நடந்தது

Added : அக் 13, 2021
Share
நத்தம் : நத்தம் செந்துறை அருகே பெரியூர்பட்டியில் ராஜகம்பளத்து நாயக்கர்களின் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் வித்தியாசமான திருவிழா நேற்று நடந்தது.நத்தம் தாலுகா செந்துறை அருகே பெரியூர்பட்டியில் மந்தையம்மன், கருத்த நாயக்கர் கோவில் உள்ளது. இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா நேற்று நடந்தது. இதில் 96 கிராமங்களைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தினர்



நத்தம் : நத்தம் செந்துறை அருகே பெரியூர்பட்டியில் ராஜகம்பளத்து நாயக்கர்களின் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் வித்தியாசமான திருவிழா நேற்று நடந்தது.நத்தம் தாலுகா செந்துறை அருகே பெரியூர்பட்டியில் மந்தையம்மன், கருத்த நாயக்கர் கோவில் உள்ளது.

இங்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா நேற்று நடந்தது. இதில் 96 கிராமங்களைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் மாடுகளுடன் கலந்து கொண்டனர்.அச்சமூகத்தின் பிரமுகர்களுக்கு பெண்கள் பாதபூஜை செய்து வரவேற்பு அளித்தனர். ஆண்களில் பெரும்பாலோர் பாரம்பரிய முறைப்படி சட்டை அணியாமல் வெள்ளை வேட்டி, தலைப்பாகை அணிந்து இருந்தனர். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான கும்மியடி, தேவராட்டம், சேர்வை ஆட்டம் போன்றவை நடந்தது.முக்கிய நிகழ்வாக மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பல்வேறு சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் இருந்து காலில் செருப்பு அணியாத ஆண்கள், கரடு முரடான பாதையில் மாடுகளுடன் ஓடி வந்தனர். கோயில் முன்பு தரையில் போட்டிருந்த வெள்ளை துண்டை 3 முறை தாண்டினர். இவ்விழா இச்சமூகத்தினரின் ஒற்றுமையை பலப்படுத்துவதாக நம்புகின்றனர். இந்த வித்தியாசமான நிகழ்வை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X