ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., வெற்றி

Added : அக் 13, 2021
Share
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரு ஒன்றிய கவுன்சில் வார்டுகளை தி.மு.க., கைப்பற்றியது.காளையார்கோவில் ஒன்றியத்தில் 6வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் பி.கந்தசாமி தி.மு.க 2526 ஓட்டுக்களும், அவரை அடுத்து பா.ஜ., ரா. அழகுராஜா 784 ஓட்டுக்களையும் பெற்றனர். 1742 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., கந்தசாமி வெற்றி பெற்றார்.சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரு ஒன்றிய கவுன்சில் வார்டுகளை தி.மு.க., கைப்பற்றியது.காளையார்கோவில் ஒன்றியத்தில் 6வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் பி.கந்தசாமி தி.மு.க 2526 ஓட்டுக்களும், அவரை அடுத்து பா.ஜ., ரா. அழகுராஜா 784 ஓட்டுக்களையும் பெற்றனர். 1742 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., கந்தசாமி வெற்றி பெற்றார்.

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ஒக்குப்பட்டி ஊராட்சித்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சி.யுவானியா 582 ஓட்டுக்களும், செ.காளிமுத்து 352 ஓட்டுக்களும் பெற்றனர். இதில் யுவானியா 230 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மேலப்பூங்குடி ஊராட்சித்தலைவருக்கான போட்டியில் ரா.கிருஷ்ணன் 958 ஓட்டுக்களும், நா.சோனை 811 ஓட்டுக்களும் பெற்றனர். இதில் 147 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கிருஷ்ணன் வெற்றி பெற்றார்.சிவகங்கை ஊராட்சி வார்டுகளில் காஞ்சிரங்கால் 8 வது வார்டில் சுரேஷ்கண்ணன், நாலுகோட்டை 2 வது வார்டில் கி.தமிழ்செல்வன், இலுப்பக்குடி 4 வது வார்டில் ம.கனராஜன், முடிகண்டம் 5 வது வார்டில் சு.வளர்மதி, தமறாக்கி தெற்கு 6 வது வார்டில் சோ.மருதுபாண்டி செல்வம் வெற்றி பெற்றனர்.காளையார்கோவில் ஒன்றியத்தில் காளையார்கோவில் ஊராட்சி 10 வது வார்டில் க.அமிர்தவள்ளி, அல்லுார் பனங்காடி 3 வது வார்டில் சி.பிரியதர்ஷினி, முடிக்கரை ஊராட்சி 9 வது வார்டில் மு.கவிதா, சேதாம்பல் 5வது வார்டில் மு.வேலுச்சாமி வெற்றி பெற்றனர். இதே போல் இளையான்குடி, திருப்புத்துார், தேவகோட்டை, கல்லல், எஸ்.புதுார், மானாமதுரை, சாக்கோட்டை, திருப்புவனம், கண்ணங்குடி பகுதிகளில் இருந்து 23 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X