சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் கான்ட்ராக்டர் தீக்குளிக்க முயற்சி

Added : அக் 13, 2021
Share
Advertisement
தேனி : தேனி நகராட்சியில் கான்ட்ராக்டருக்கு கட்டுமான தொகை வழங்காததால் தீக்குளிக்க முயன்றார்.தேனி பாண்டியன் ஆயில் மில் தெரு முருகேசன் 55,தேனி நகராட்சி ஒப்பந்ததாரர். இவர் 3 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் கமிஷனர் நாகராஜ் இருந்தபோது, நகராட்சி அலுவலக தரைத்தளத்தில் ஒரு அறை ரூ.3.50 லட்சம் மதிப்பில் கமிஷனர் வாய்மொழியில் கூறியதை நம்பி கட்டி முடித்து ஒப்படைத்துள்ளார். இதற்கான

தேனி : தேனி நகராட்சியில் கான்ட்ராக்டருக்கு கட்டுமான தொகை வழங்காததால் தீக்குளிக்க முயன்றார்.தேனி பாண்டியன் ஆயில் மில் தெரு முருகேசன் 55,தேனி நகராட்சி ஒப்பந்ததாரர். இவர் 3 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் கமிஷனர் நாகராஜ் இருந்தபோது, நகராட்சி அலுவலக தரைத்தளத்தில் ஒரு அறை ரூ.3.50 லட்சம் மதிப்பில் கமிஷனர் வாய்மொழியில் கூறியதை நம்பி கட்டி முடித்து ஒப்படைத்துள்ளார்.

இதற்கான தொகையை பெறவில்லை. தற்போது நகராட்சி நிர்வாகத்திடம் தொகை வழங்க கோரினார். ஆனால் நிர்வாகத்தினர் முறைப்படி பணி ஆணை வழங்காமல், ஒப்பந்தம் கோராததால் தொகை வழங்க இயலாது என மறுத்துள்ளனர். மனம் உடைந்து நேற்று நகராட்சி அலுவலக வளாகத்திற்கு வந்த முருகேசன் 2 லி., மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்தவர்கள் காப்பாற்றினர். கமிஷனர் சுப்பையா, முந்தைய கமிஷனரிடம் பேசி ஒருவாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X