பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை செடிகள் மழையின்றி பாதிப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மறவபட்டி பகுதியில் மழை இன்மையால் வளர்ந்த நிலையில் உள்ள நிலக்கடலை பயிர்கள் காய்ந்து வருகிறது. இரு மாதத்திற்கு முன் பெய்த மழையில் இப்பகுதி விவசாயிகள் நுாறு ஏக்கருக்கும் அதிகமான மானாவாரியில் நிலக்கடலை விதைப்பு செய்தனர். அடுத்தடுத்த மழையில் விதைத்த கடலை முளைத்து வளர்ந்த நிலையில் சில வாரமாக மழை பெய்யவில்லை. வளர்ந்த பயிர்கள் தற்போது காற்று,
 நிலக்கடலை செடிகள் மழையின்றி பாதிப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி மறவபட்டி பகுதியில் மழை இன்மையால் வளர்ந்த நிலையில் உள்ள நிலக்கடலை பயிர்கள் காய்ந்து வருகிறது.

இரு மாதத்திற்கு முன் பெய்த மழையில் இப்பகுதி விவசாயிகள் நுாறு ஏக்கருக்கும் அதிகமான மானாவாரியில் நிலக்கடலை விதைப்பு செய்தனர். அடுத்தடுத்த மழையில் விதைத்த கடலை முளைத்து வளர்ந்த நிலையில் சில வாரமாக மழை பெய்யவில்லை. வளர்ந்த பயிர்கள் தற்போது காற்று, வெயிலால் காய்ந்து வருகிறது.விவசாயிகள் கூறியதாவது; இப்பகுதியில் உள்ள வளமான மண் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றது. ஆறு மாதத்தில் பலன் தரும் நாட்டுக்கடலை விதைப்பு செய்யப்படுகிறது. ஆகஸ்ட்டில் விதைப்பு செய்து கடலை தற்போது செடியாக வளர்ந்துள்ளது. மழை இன்றி காய்ந்து வருகிறது. இந்த பருவத்தில் பெய்யும் மழை செடிகளில் கடலை பிடிப்புக்கு ஏற்றதாக இருக்கும். மழை தாமதம் விளைச்சலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X