பொது செய்தி

தமிழ்நாடு

வேலை இல்லாதோர் உதவித்தொகை பெறுவதில் ஆர்வமில்லை தகுதி, விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
தேனி, : தேனி மாவட்டத்தில் வேலை இல்லாதோருக்கு அரசு உதவி தொகை பெறுவதில் ஆர்வமில்லை. தகுதி, விருப்பம் உள்ளோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை கோரி ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 185 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பயன்பெற வேலைவாய்ப்பு


தேனி, : தேனி மாவட்டத்தில் வேலை இல்லாதோருக்கு அரசு உதவி தொகை பெறுவதில் ஆர்வமில்லை. தகுதி, விருப்பம் உள்ளோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை கோரி ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 185 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஒரு ஆண்டை கடந்திருக்க வேண்டும். மாவட்டத்தில் தற்போது 194 மாற்றுத்திறனாளிகள், மற்றவர்கள் 1277 பேர் என மொத்தம் 1471 பேர் பயன்பெறுகின்றனர்.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் மிக குறைந்ளவில் பயன்பெறுகின்றனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு காலாண்டும் ரூ.1800(எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி), ரூ.2250 (பிளஸ் 2), ரூ.3000(டிகிரி) வழங்கப்படும். மற்றவர்களுக்கு ரூ.600(எஸ்.எஸ்.எல்.சி., தோல்வி), 900(எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி), 1200 (பிளஸ் 2), 1800 (டிகிரி) கிடைக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரையும், மற்றவர்களுக்கு 3 ஆண்டும் உதவித்தொகை வழங்கப்படும்.இவர்களுக்கு வேலைவாய்ப்பு இன்றி ஆண்டு குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆர்.ஐ.யிடம் வருமான சான்றிதழ் பெற வேண்டும். இது மாற்றுத்திறனாளிகளுக்கு பொருந்தாது. உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். தொழில்நுட்பம், விவசாயம், சட்டம், மருத்துவம் படித்தவர்களுக்கு கிடையாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X