வளரி ஆயுதத்துடன் நடுகல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வளரி ஆயுதத்துடன் நடுகல்

Added : அக் 13, 2021
Share
எழுமலை : எழுமலை அருகே இ.கோட்டைப்பட்டியில் கைகளில் வளரி, வேல், இடுப்பில் குறுவாளுடன் தலைவன், கும்பிட்ட நிலையில் தலைவி சிற்பத்துடன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.ஐநுாறு ஆண்டுகள் பழமையான இக்நடுகல் 3 அடி உயரம், 3 அடி அகலம் கொண்டதாக பாதி உருண்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் புடைப்புச்சிற்பமாக தலைவனும், தலைவியும் உள்ளனர்.தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்

எழுமலை : எழுமலை அருகே இ.கோட்டைப்பட்டியில் கைகளில் வளரி, வேல், இடுப்பில் குறுவாளுடன் தலைவன், கும்பிட்ட நிலையில் தலைவி சிற்பத்துடன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஐநுாறு ஆண்டுகள் பழமையான இக்நடுகல் 3 அடி உயரம், 3 அடி அகலம் கொண்டதாக பாதி உருண்டை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் புடைப்புச்சிற்பமாக தலைவனும், தலைவியும் உள்ளனர்.தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது: வளரி, வேல் தொன்மையான ஆயுதங்கள். ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் காணப்படும் பழமையான வளரி மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளில் காணப்படுகின்றன.

கி.பி.1800காலகட்டத்தில் வளரியை யாரும் பயன்படுத்த கூடாது என தடை செய்துள்ளனர். மதுரைக்கு மேற்கே பழமையான வளரியுடன் கூடிய சிற்பங்கள் கிடைக்கின்றன. கருமாத்தூர் கோவிலாங்குளம் பட்டவன் சுவாமி கோயிலில் தற்போதும் வளரி ஆயுதத்தை நேர்த்திக்கடனாக செலுத்தும் வழக்கம் உள்ளது என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X