சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரைய விபரம் மறைத்து மாஜி எம்.பி., மகனுக்கு நிலம் விற்பனை மூவர் மீது மோசடி வழக்கு

Added : அக் 13, 2021
Share
Advertisement
தேனி : ஆண்டிபட்டி எரதிமக்காள்பட்டி கோவிந்தராஜ். இவரது மனைவி செண்பகவள்ளி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அல்லிநகரத்தில் உள்ளது.மொத்தம் உள்ள 87 செண்ட் நிலத்தில் இவர்களின் பங்கு நிலத்தில் தலா ஒரு செண்ட் நிலம் ரூ.3.60 லட்சத்திற்கு தேனி ராஜேஸ்கண்ணா என்பவருக்கு 2019 ஜூலை 31ல் கிரையம் பேசி முன்பணம் ரூ.20 லட்சம் பெற்றனர். நீதிமன்ற வழக்கு முடிந்து, பாகப்பிரிவினை நிலம் கிடைத்ததும்



தேனி : ஆண்டிபட்டி எரதிமக்காள்பட்டி கோவிந்தராஜ். இவரது மனைவி செண்பகவள்ளி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அல்லிநகரத்தில் உள்ளது.மொத்தம் உள்ள 87 செண்ட் நிலத்தில் இவர்களின் பங்கு நிலத்தில் தலா ஒரு செண்ட் நிலம் ரூ.3.60 லட்சத்திற்கு தேனி ராஜேஸ்கண்ணா என்பவருக்கு 2019 ஜூலை 31ல் கிரையம் பேசி முன்பணம் ரூ.20 லட்சம் பெற்றனர். நீதிமன்ற வழக்கு முடிந்து, பாகப்பிரிவினை நிலம் கிடைத்ததும் நிலத்தை ஒப்படைப்பதாக பத்திரம் பதிவு செய்து மகள் ரம்யாவை சாட்சி கையெழுத்திட்டு வழங்கினர்.

இந்த விபரங்களை மறைத்து, தேனி முன்னாள் எம்.பி., ஜே.எம்.ஆருண் ராஷித் மகன் இம்ரான்கான் என்பவருக்கு கோவிந்தராஜ் கிரையம் முடித்தனர். இதுகுறித்து ராஜேஸ்கண்ணா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்தார். நீதிமன்ற உத்தரவில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., முருகன், கோவிந்தராஜ், மனைவி செண்பகவள்ளி, மகள் ரம்யா மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X