அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு விரைவில் நிவாரணம்'

Updated : அக் 13, 2021 | Added : அக் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் சேகரித்து அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும்'' என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை கண்ணகி நகரில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை துவக்கி வைத்த அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் டெங்கு
Corona Virus, Covid Warriors, Doctors

சென்னை : ''கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த டாக்டர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் சேகரித்து அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும்'' என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை கண்ணகி நகரில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை துவக்கி வைத்த அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளது. மாநிலம் முழுதும் இரு குழந்தைகள் உட்பட 331 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்; தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.


latest tamil news


கொரோனாவால் உயிரிழந்த நான்கு டாக்டர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் இதர காரணங்களால் உயிரிழந்தவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க 400 கோடி ரூபாய்செலவிட நேரிடும். எனவே கொரோனாவால் உண்மையாக பாதித்து உயிரிழந்தவர்களை கண்டறியும் பணி ஒரு வாரத்தில் முடிவடையும்; தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும்.

இந்த ஆட்சி வெளிப்படைதன்மையுடன் பணியிட மாற்றங்களை வழங்கி வருகிறது. தற்போது வரை 6300 பேருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணி நிரந்தரம் செய்வது இயலாது. அவர்களை துறை வாரியாக கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றுகிற தற்காலிக பணியாளர்களுக்கு 30 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 87 கோடி ரூபாய் கூடுதலாக செலவிடப்படுகிறது. இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
13-அக்-202109:07:13 IST Report Abuse
duruvasar என்னங்க மாசு. அடையாளம் காணும் குழுவின் தலைவர் யார் என்ற அறிவிப்பும் இல்லை , பரிந்துரை வருமுன்பே தேதி குறிப்பிடாம வாக்குறுதி கொடுத்தீடிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X