சிலம்பம் போட்டியில் புதுச்சேரி வீரர்களுக்கு தங்கப் பதக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிலம்பம் போட்டியில் புதுச்சேரி வீரர்களுக்கு தங்கப் பதக்கம்

Added : அக் 13, 2021
Share
புதுச்சேரி : கோவா மாநிலத்தில் நடந்த தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில், புதுச்சேரி வீரர்கள் தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.கோவா மாநிலம் மட்கானில், கேலோ இந்தியா மற்றும் பிட் இந்தியா அமைப்புகள் சார்பில் 4வது தேசிய இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி 2021 கடந்த வாரம் நடைபெற்றது. இதில், சிலம்பம், கபடி, மல்யுத்தம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்

புதுச்சேரி : கோவா மாநிலத்தில் நடந்த தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில், புதுச்சேரி வீரர்கள் தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோவா மாநிலம் மட்கானில், கேலோ இந்தியா மற்றும் பிட் இந்தியா அமைப்புகள் சார்பில் 4வது தேசிய இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி 2021 கடந்த வாரம் நடைபெற்றது. இதில், சிலம்பம், கபடி, மல்யுத்தம், கராத்தே உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், சிலம்பம் போட்டியில் புதுச்சேரி வீரஆஞ்ச நேயர் தற்காப்பு கலைக்குழு பயிற்சி ஆராய்ச்சி கழக வீரர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்றனர். பெரியாண்டவர் வீர சிலம்பாட்டம் மற்றும் நாடகக் கலைக்குழு வீரர்கள் 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X