தடையில்லா சான்று கோரி மறியல் செய்த 9 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையில்லா சான்று கோரி மறியல் செய்த 9 பேர் கைது

Added : அக் 13, 2021
Share
பெண்ணாடம்- : பெண்ணாடம் கோவில் இடத்தில் குடியிருப்போர்கள் மின்இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கருங்குழி தோப்பில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், 7 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லை. இவர்கள் புதிதாக மின் இணைப்பு பெற கோவில் செயல் அலுவலர் கருணாகரனிடம் தடையில்லா

பெண்ணாடம்- : பெண்ணாடம் கோவில் இடத்தில் குடியிருப்போர்கள் மின்இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கருங்குழி தோப்பில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

அதில், 7 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு இல்லை. இவர்கள் புதிதாக மின் இணைப்பு பெற கோவில் செயல் அலுவலர் கருணாகரனிடம் தடையில்லா சான்று வழங்குமாறு கேட்டனர். அவர் கோவில் இடம் எனக்கூறி, மறுத்துள்ளார்.ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பகல் 10:30 மணியளவில் ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்க நிறுவனர் வழக்கறிஞர் பத்மநாபன் தலைமையில் பழைய பஸ் நிலையத்தில், விருதை - திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X