பொது செய்தி

தமிழ்நாடு

குமராட்சி ஒன்றிய கவுன்சிலர்

Added : அக் 13, 2021
Share
Advertisement
சிதம்பரம், : குமராட்சி ஒன்றியம் 19 வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சங்கர் 181 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.குமராட்சி ஒன்றியம் 19 வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்த பா.ம.க.,வை சேர்ந்த ஜெகன் பன்னீர்செல்வம் இறந்ததால் இடைத்தேர்தலில் நடந்தது. இதில் அ.தி.மு.க., சார்பில் சுந்தரமூர்த்தி, தி.மு.க., சார்பில் சங்கர் போட்டியிட்டனர். இருவரும்

சிதம்பரம், : குமராட்சி ஒன்றியம் 19 வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் சங்கர் 181 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

குமராட்சி ஒன்றியம் 19 வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்த பா.ம.க.,வை சேர்ந்த ஜெகன் பன்னீர்செல்வம் இறந்ததால் இடைத்தேர்தலில் நடந்தது. இதில் அ.தி.மு.க., சார்பில் சுந்தரமூர்த்தி, தி.மு.க., சார்பில் சங்கர் போட்டியிட்டனர். இருவரும் அவரவர் கட்சியில் ஒன்றிய செயலாளர்களாக இருப்பதால் போட்டி நிலவியது.நேற்று குமராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. மொத்தமுள்ள 5, 308 ஓட்டுகளில் 4,149 பதிவானது. இதில் தி.மு.க., வேட்பாளர் சங்கர் 2, 041 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., சுந்தரமூர்த்தியை விட 181 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் பா.ம.க., சசிக்குமார் 134; நாம் தமிழர் கட்சி ஆனந்தராஜ் 17 ஓட்டுகள் பெற்றனர். இதில் 28 ஓட்டுகள் செல்லாதவை. தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X