மாதா கோவில் பெண் ஊழியரிடம் நுாதன முறையில் 2 சவரன் 'அபேஸ்'

Added : அக் 13, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் மாதா கோவிலில் தங்கி சேவை செய்த இரு பெண்கள், துப்புரவு பெண் ஊழியரிடம் நுாதன முறையில் இரண்டு சவரன் நகையை அபேஸ் செய்து சென்றனர்.அரியாங்குப்பம் அடுத்த தமிழக பகுதியான சின்ன இருசாம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி ஷீலாதேவி, 45; அரியாங்குப்பம் மாதா கோவிலில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.கடந்த மாதம் மாதா கோவிலில் தேர்

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் மாதா கோவிலில் தங்கி சேவை செய்த இரு பெண்கள், துப்புரவு பெண் ஊழியரிடம் நுாதன முறையில் இரண்டு சவரன் நகையை அபேஸ் செய்து சென்றனர்.

அரியாங்குப்பம் அடுத்த தமிழக பகுதியான சின்ன இருசாம்பாளையத்தை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி ஷீலாதேவி, 45; அரியாங்குப்பம் மாதா கோவிலில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.கடந்த மாதம் மாதா கோவிலில் தேர் திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு வந்த இரு பெண்கள் கோவி லில் மூன்று தினங்கள் தங்கி சேவை செய்தனர்.அப்போது ஷீலாதேவியிடம் பேச்சு கொடுத்த அவர்கள் இருவரும், திருவிழா கூட்டத்தில் திருடர்கள் இருப்பர். அதனால் நகையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி, ஷீலாதேவி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினை வாங்கி, தங்கள் பையில் வைத்துக் கொண்டனர். ஷீலாதேவி கண்களை மூடி ஜெபம் செய்துபோது, இரு பெண்களும் நகையுடன் மாயமாகினர்.புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து நகையை திருடி சென்ற இரண்டு பெண்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X