பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 13.50 லட்சத்தில் உபகரணங்கள் அரசு மருத்துவமனைக்கு வழங்கல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கடலுார்: கொரோனா பாதித்தவர்களுக்கு உதவிடும் வகையில், ரூ. 13.50 மதிப்பு மருத்துவ உபகரணங்கள், பிளஸ் நிறுவனம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிளஸ் தன்னார்வ நிறுவனம், ஆக்ஸ்பாம் நிறுவனத்துடன் இணைத்து ''திசுசீ'' நிறுவனத்தின் வழியாக கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ 50 ஆக்சிஜன் சிலிண்டர், 20 பல்ஸ் மீட்டர், 15 ஆக்சிஜன்
 ரூ. 13.50 லட்சத்தில் உபகரணங்கள்  அரசு மருத்துவமனைக்கு வழங்கல்

கடலுார்: கொரோனா பாதித்தவர்களுக்கு உதவிடும் வகையில், ரூ. 13.50 மதிப்பு மருத்துவ உபகரணங்கள், பிளஸ் நிறுவனம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

கடலுார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிளஸ் தன்னார்வ நிறுவனம், ஆக்ஸ்பாம் நிறுவனத்துடன் இணைத்து ''திசுசீ'' நிறுவனத்தின் வழியாக கொரோனா பாதித்தவர்களுக்கு உதவ 50 ஆக்சிஜன் சிலிண்டர், 20 பல்ஸ் மீட்டர், 15 ஆக்சிஜன் கன்சென்டிரேட்டர், 20 நெபுலைஸிர், 10 பி.பி.ஆபரேட்டர்ஸ், 70 டிஜிட்டல் தெர்மோ மீட்டர் என, மொத்தம் ரூ. 13.5 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

மருத்துவ இணை இயக்குனர் ரமேஷ் பாபு, கண்காணிப்பாளர் சாயிலீலா, ஆம்.எம்.ஓ., நடராஜன் ஆகியோரிடம், பிளஸ் நிறுவன நிர்வாக செயலர் அந்தோணிசாமி, ஆக்ஸ்பாம் நிறுவனத்தை சேர்ந்த நேகா, வந்தனா, மகேஷ், லெனின் ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சியில் பிளஸ் நிறுவன அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X