பொது செய்தி

இந்தியா

மரப்பாலம் சந்திப்பில் மெகா பள்ளம் போக்குவரத்து போலீஸ்காரர் சீரமைப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : மரப்பாலம் சந்திப்பில் இருந்த மெகா பள்ளத்தை, போக்குவரத்து போலீஸ்காரர் தற்காலிகமாக சீரமைத்தார்.புதுச்சேரி - கடலுார் சாலை மரப்பாலம் சந்திப் பில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து தலைமை மின் நிலையத்திற்கு உயர் மின் அழுத்த கேபிள் புதைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டினர்.பணி முடிவடைந்து 3 மாதங்கள்
 மரப்பாலம் சந்திப்பில் மெகா பள்ளம்  போக்குவரத்து போலீஸ்காரர் சீரமைப்பு

அரியாங்குப்பம் : மரப்பாலம் சந்திப்பில் இருந்த மெகா பள்ளத்தை, போக்குவரத்து போலீஸ்காரர் தற்காலிகமாக சீரமைத்தார்.

புதுச்சேரி - கடலுார் சாலை மரப்பாலம் சந்திப் பில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து தலைமை மின் நிலையத்திற்கு உயர் மின் அழுத்த கேபிள் புதைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டினர்.பணி முடிவடைந்து 3 மாதங்கள் ஆகியும் பள்ளம் சீரமைக்கப்படவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையால் மரப்பாலம் சந்திப்பில், கடலுார் சாலையில் இருந்த பள்ளம் மேலும் பெரியதாக மாறியது. அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் மவுலீஸ்வரன், அந்த வழியாக டாடா ஏஸ் வாகனத்தில் சென்ற இருவர் உதவியுடன், அருகில் இருந்து மண்ணை கொண்டு வந்து பள்ளத்தில் கொட்டி, தற்காலிகமாக சரி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X