பொது செய்தி

இந்தியா

திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Added : அக் 13, 2021
Share
Advertisement
வில்லிகயனுார் : கரிக்கலாம்பாக்கம் அருகே, திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் சாராயத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர் கிராமத்தை சேர்ந்தவர்; ராமமூர்த்தி மகன் தெய்வநாயகம் (28). ஆச்சார்யபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்துவந்தார். திருமணம் நடைபெறாததால் விரக்தியில் இருந்து வந்தார்.வேலைக்கு சென்ற

வில்லிகயனுார் : கரிக்கலாம்பாக்கம் அருகே, திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் சாராயத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர் கிராமத்தை சேர்ந்தவர்; ராமமூர்த்தி மகன் தெய்வநாயகம் (28). ஆச்சார்யபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்துவந்தார். திருமணம் நடைபெறாததால் விரக்தியில் இருந்து வந்தார்.வேலைக்கு சென்ற தெய்வநாயகம், நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் கரிக்கலாம்பாக்கம் சாராயக் கடை பகுதியில் இறந்து கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.அவர்கள் சென்று பார்த்தபோது, தெய்வநாயகம் சாராயத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X